Watermelon Face Pack in Tamil
இந்த வெயிலுக்கு ஏற்ற பழமாக இருப்பது தர்பூசணி தான். இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த கூடியது தான். அதனால் இந்த வெயில் காலத்தில் தினமும் ஒன்று எடுத்து கொள்வார்கள். இந்த வெயில் காலத்தில் முக அழகையும். உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. தர்பூசணி பழமானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் முக அழகிற்கும் உதவியாக இருக்க கூடியது. அதனால் தான் இந்த பதிவில் தர்பூசணி முக அழகு குறிப்பு பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தர்ப்பூசணி மற்றும் பயத்தை மாவு:
ஒரு பீஸ் தர்ப்பூசணி எடுத்து அதன் சதையை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும், இதிலிருந்து வரும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் பயத்த மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். ஐப்பசி செய்வதால் முகமானது பொலிவு பெறும்.
தர்ப்பூசணி சாறு மற்றும் சிறிதளவு தேன், தயிர் போன்றவற்றை மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்:
தர்ப்பூசணி சாற்றை ஒரு பவுலில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் வெள்ளரிக்காய் எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை வடிக்கட்டி வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு காட்டன் துணியால் நனைத்து கொண்டு முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி விடும்.
தர்ப்பூசணி:
தர்பூசணியை எடுத்து மிக்சி ஜாரில் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் வெயிலில் சென்று வந்தீர்கள் என்றாள் வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு பிறகு இந்த தர்பூசணி பேஸ்ட்டை முகத்தில் அப்பளை செய்ய வேண்டும். இதனை முகத்தில் ஒரு 15 நிமிடத்திற்கு வைத்து விட்டு அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலினால் முகம் எரிச்சலை ஏற்படுத்தியிற்கும். இந்த நிலையினை சரி செய்ய முடியும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |