White Hair to Black Hair Permanently
இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை பயன்படுகின்றனர். இந்த ஹேர் டையை பயன்படுத்தும் போது நரை முடி கருப்பாக மாறும். நிரந்தரமாக வெள்ளை முடியை கருப்பாக வேண்டுமென்றால் இயற்கையான முறையை கையாள வேண்டும். இன்றைய பதிவில் இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இயற்கை ஹேர் டை:1
மருதாணி இலைகளை வெயிலில் காய வைத்து தண்ணீர் ஊற்றாமல் பவுடராக அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அரைத்து வைத்த மருதாணி பவுடர் 2 தேக்கரண்டி, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை 8 மணி நேரம் அப்படியே கடாயில் வைக்கவும். இரவு முழுவதும் மிக்ஸ் செய்து வைக்கவும். மறுநாள் காலையில் இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். மேலும் இந்த பேக்கை மாதத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நிரந்தரமாக நரை முடி கருப்பாக மாறிவிடும்.
இயற்கை ஹேர் டை:2
அடுப்பில் பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் டீதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து இரும்பு கடாயில் அவுரி பொடி 2 தேக்கரண்டி, நெல்லிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி, மருதாணி பவுடர் 3 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு டீகாஷனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை இரவு முழுவதும் அப்படியே கடாயில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த பேக்கை தலை முடி முழுவதும் நன்றாக அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த குறிப்பை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்து வந்தாலே நிரந்தரமாக நரை முடி கருப்பாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |