White Hair to Black Hair Dye Home Remedies
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் நரை முடி பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை, வைட்டமின்கள் குறைபாடு போன்றவற்றால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கடையில் விற்கும் ரசாயண கலந்த ஹேர் டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இப்படி பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஹேர் டை தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வெங்காயம்:
வெங்காயம் கேடலேஸ் என்ற நொதியை அதிகரிக்கிறது, இதனால் முடி கருமையாகிறது. எலுமிச்சை சாறுடன்சேரும் போது கூந்தலுக்கு பளபளப்பு தன்மையை தருகிறது.இரண்டு வெங்காயம் எடுத்து சிறியதாக கட் செய்து அதனை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த வெங்காயத்தை வடிக்கட்டி அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். வெங்காய சாற்றில் சிறிதளவு எலும்பிச்சை சாறு, 2 தேக்கரண்டி கருஞ்ஜீரக பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இது போல் 5 நாட்கள் செய்து வந்தால் நிரந்தரமாக நரை முடி கருப்பாக மாறிவிடும்.
நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர வேண்டுமானால் இந்த எண்ணெயை தடவுங்க
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்:
கறிவேப்பிலையில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் மயிர்க்கால்களில் உள்ள நிறமி மெலமைனை மீட்டெடுக்க உதவுகிறது மேலும் முடி நரைப்பதையும் தடுக்கிறது. இதில் பீட்டா-கெரட்டின் நிறைந்த ஆதாரமாக உள்ளது மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கிறது.ஒரு இரும்பு கடாய் எடுத்து அதில் 100 தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதில் ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து கருப்பாகும் வரை கொடுக்க விடவும். இது ஆறிய பிறகு வடிக்கட்டியை வைத்து வடிக்கட்டி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதனை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும். இல்லையென்றால் இரவு முழுவதும் தலையில் தடவி காலையில் எழுந்து தலை தேய்த்து குளிக்கவும்.
மருதாணி:
ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு மருதாணி சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை கொதிக்க வைத்த காபியில் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இதை அப்படியே இரவு முழுவதும் தலையில் அப்படியே வைத்து விடவும். இந்த பேக்கை தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |