வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க இந்த ஒரு பொருள் போதும்

Updated On: November 18, 2025 2:36 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

ஏலக்காய் அழகு குறிப்பு

இன்றைய பதிவில் முகப்பரு வராமல் முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவும் ஏலக்காய் பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். நாம் அனைவரும் ஏலக்காயை சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை பொருளாகத்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஏலக்காயை வைத்து சரும ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நல்ல தூக்கத்தையும் பெற முடியும். ஏலக்காய் பருக்களை  போக்கி பொலிவான சருமத்தை அளிக்கிறது. இந்திய சமையலறை பொறுத்த வரையில் ஏலக்காய் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.  இது மட்டுமல்லாமல் இந்த ஏலக்காய் ஜிங்கிபெரேசி குடும்பத்தை சேர்ந்த தாவர விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஏலக்காயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. மேலும், ஏலக்காயை வாயில் போட்டு மெல்லும் போது வாய் துர்நாற்றம் போன்றவற்றை சரி செய்கிறது. ஏலக்காயை சோப் பாடி வாஷ் மற்றும் பவுடர் போன்றவற்றில் பயன்படுத்தி வருகின்றன. சரி வாங்க இந்த பதிவில் ஏலக்காய் அழகு குறிப்புகள் பற்றி பார்க்ககிறோம்.

ஏலக்காயின் சரும பயன்கள்:

பெண்களே உங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்  !! - லங்காசிறி நியூஸ்

முகத்தில் முகப்பரு மறைய ஏலக்காயில் ஆன்டி பாக்டீரியா உள்ளது. இது முகத்தில் ஏற்படும் பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. ஏலக்காயில் பேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கி நல்ல பளபளப்பையும் அதே நேரத்தில் சருமத்திற்க்கு நல்ல நிறத்தையும் அளிக்கிறது. 

பீட்ரூட் அழகு குறிப்பு..! Beetroot Face Pack in Tamil..!

ஏலக்காய் பேஸ் மாஸ்க் :   

1 டீ ஸ்பூன் ஏலக்காய் பவுடருடன் கொஞ்சம் தேன் கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா தன்மை பருக்களை குணப்படுத்தவும், பருக்கள் வாராமல் தடுக்கவும் மற்றும் முகத்தில் தழும்புகள் போக்கவும் உதவுகிறது. இந்த பேஸ்ட் இரவில் முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி  சில மணி நேரத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில்  இருக்கும் பருக்களை ஆற்ற உதவுகிறது. தேன் இயற்கையான மாய்ஸ்ட்ரைஸர் என்பதால் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முகத்தை பொலிவாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் :

ஏலக்காயில் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மை இருக்கிறது. இது உங்களுக்கு மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. மேலும், இரவில் நன்றாக தூங்கினால் முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. எனவே நல்ல தூக்கத்தையும் நல்ல சருமத்தையும் பெற ஏலக்காய் உதவி செய்கிறது. 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now