அரோகரா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.?

Advertisement

Arohara Meaning in Tamil

பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கோஷம் எனப்து இருக்கும். அந்த கடவுளுக்குரிய கோஷத்தை உச்சரித்தே கடவுளை வணங்குவோம். அந்த  வகையில், இந்து கடவுள்களில் அனைவர்க்கும் பிடித்த கடவுளாகவும் கேட்டதை அளிக்கும் கடவுளாகவும் இருக்கும் முருக பெருமானை அரோகரா கோஷத்தை எழுப்பி வணங்குவோம். நாம் அனைவருமே இந்த அரோகரா என்பதை உச்சரித்து வணங்குவோம் தவிர அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே, அந்த வகையில் நீங்கள் அரோகரா கோஷத்திற்க்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அரோகரா அர்த்தத்தை பதிவிட்டுள்ளோம்.

முருகனை வணங்கும்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற கோஷத்தை எழுப்பி வணங்குவது வழக்கம். இந்த கோஷம் திருச்செந்தூரில் சூர சம்ஹார விழா நாளில் மிகவும் பிரபலமான ஓன்று. இப்படி பல சிறப்புகள் பெற்ற முருகப்பெருமானின் அரோகரா கோஷத்திற்கு என்ன அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அரோகரா என்றால் என்ன.?

அரோகரா என்றால் என்ன

அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் சுருக்கம் தான் ‘அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ ஆகும். இந்த கோஷம் முதன்முதலில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரால் உருவானது என்று கூறுவார்கள். அதாவது, திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்தபோது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள், அவர்களின் களைப்பைக் குறைப்பதற்காக ‘ஏலே லோ ஏலே லோ’ என்று பாடிக்கொண்டே வந்தார்கள். இதனை கேட்ட திருஞானசம்பந்தர் இதற்கு எந்த ஒரு பொருளும் இல்லை. அதனால், பொருளுடைய ஒன்ற கூறுங்கள் என்று அர ஹரோ ஹரா’ என்று அடியவர்களுக்கு கற்று கொடுத்தார். ‘ஈசனை வணங்கி இதை சொன்னால் உங்கள் களைப்பு நீங்குவதோடு துன்பங்கள் நீங்கி இன்பம் உண்டாகும் என்று கூறினார். இதுவே நாளடைவில் ‘அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்று சொல்வது வழக்கமாக மாறிவிட்டது.

சித்ரா பௌர்ணமி என்றால் என்ன.

அரோகரா அர்த்தம்:

‘ஹர ஹரோ ஹரா’ என்றால் ஹர என்றால் ஈசன் என்றும், ஹரோ என்றால் துன்பம் என்றும், ஹரா என்றால் அறுவது என்றும் என்றும் பொருள்ப்படும். அதாவது, “ஈசனே துன்பங்களை நீக்கி எங்களுக்கு நல்லருள் புரிவாய்” என்று அர்த்தம் ஆகும்.

இந்த அரோகரா கோஷம் ஆனது, மலையின் மீது ஏறி காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் களைப்பு நீக்கும் மந்திரச் சொல்லாக ஆனது. அரோகரா என்று கூறுபவர்களுக்கு பிணியும் இல்லை, துன்பமும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா… வேலனுக்கு அரோகரா… குமரனுக்கு அரோகரா! என்று முருகப்பெருமானை வணங்கி வாழ்க்கையில் இன்பங்களையும் நோயில்லா வாழ்வினையும் பெறுங்கள்.

சின்ன சின்ன முருகையா பாடல்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement