வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்..!

Updated On: November 29, 2023 1:18 PM
Follow Us:
Ayilyam Nakshatra Characteristics in Tamil
---Advertisement---
Advertisement

ஆயில்யம் நட்சத்திரம் குணங்கள் – Ayilyam Nakshatra Characteristics in Tamil

பொதுவாக பெரும்பாலானவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்று விரும்புகின்றன. இதற்கு காரணம் அந்த குழந்தைக்கு திருமணம் நிகழும் போது பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படும். நட்சத்திரங்கள் வரிசையில் இந்த ஆயில்யம் நட்சத்திரம் ஒன்பதாவது நட்சத்திரம் ஆகும். ராமர் வனவாசம் செல்லும் போது உடன் சென்று பணிவிடை செய்வதையே கடமையாக கொண்ட லட்சுமணர் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். மேலும் மகாத்மா காந்தி மற்றும் நேரு பிறந்த நட்சத்திரமும் ஆயில்யம் நட்சத்திரம் தான். சரி இந்த பதிவில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்..!

  • ராசி: கடகம்
  • அதிபதி: புதன்
  • ராசி அதிபதி: சந்திரன்
  • அதிதேவதை: ஆதிசேஷன்
  • பரிகார தெய்வம்: பெருமாள்
  • கணம்: ராட்சஸ கணம்
  • மரம்: புன்னைமரம்
  • மிருகம்: ஆண் பூனை
  • பட்சி: கிச்சிலி
  • கோத்திரம்: அகத்தியர்
  • வடிவம் – பாம்பு

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
கன்னி ராசியின் பொது பலன்கள் மற்றும் குணங்கள்

Ayilyam Nakshatra Characteristics in Tamil:

ஆயில்யம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 9-ஆம் இடத்தில் உள்ளது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொன், பொருள், சேர்க்கையில் விருப்பம் கொண்டவர்கள், எடுத்துக்கொண்ட செயலை நிறைவாக முடிக்கும் திறமை கொண்டவர் ஆவார்.

பிறரை கட்டுப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். தங்கள் வாழ்க்கையை தங்கள் விரும்பியபடி வாழ்வார்கள். பெற்றோர்கள் மீது விருமபம் கொண்டவர். கடுமையான சொற்களை பேசக்கூடியவர். இவர்கள் 33 வயதிற்கு பிறகு வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றத்தை காண தொடங்குவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். நட்சத்திரன் அதிபதி புதன் என்பதால் இவர்களுக்கு இயற்கையாவே பேச்சாற்றல், கல்வி ஆற்றல், சகல வித வித்தைகளையும் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடக்கூடியவர். சிறந்த அறிவாற்றலை கொண்டவர்கள். மனவலிமையையும், உடல் வலிமையையும் ஒருங்கே பெற்றவர்கள். எதிரிகளை கண்டு அஞ்சமாட்டார்கள். இவர்களிடம் ஒரு வேலையை ஒப்படைந்தால் அதனை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள்.

ஆயில்யம் நச்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருவேறு குணங்கள் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருசமயம் நல்லவர்களாக இருப்பார்கள். ஒரு சமயம் முரட்டுத்தனமும், முன்கோபம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

திட்டமிட்டு செலவு செய்யும் திறன் கொண்டவர். இவர்களுக்கு இயற்கையாகவே எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய துணிவு இருக்கும். தனக்கு சரியென பட்டால் மட்டுமே மற்றவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேசிப்பவர். இவர்களுக்கு பயணங்களில் அதிக ஆர்வம் இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். சற்று இறக்க குரணம் இருக்கும். தர்ம, நியாயத்தை கடைபிடிப்பவர்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now