ஆருத்ரா நட்சத்திரத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா..?

Advertisement

ஆருத்ரா நட்சத்திரம்

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மனிதனாக பிறந்த  நாம் அனைவருக்கும் பிறந்த தேதி மற்றும் நட்சத்திரத்தை வைத்து  ராசி மற்றும் நட்சத்திரம் என்று ஒன்று இருக்கும். அதன் படி பார்த்தால் ஆன்மீகத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் இருப்பது நமக்கு தெரியும். ஆகவே இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் தான் அனைவருக்கும் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரம் அமைக்கிரது. அந்த வகையில் காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளுக்கான 27 நட்சத்திரங்கள் என்ன என்பது நாம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அதே ஆன்மீகத்தில் ஆருத்ரா நட்சத்திரம் என்ற ஒரு நட்சத்திரமும் இருக்கிறது.

ஆனால் பலருக்கும் ஆருத்ரா நட்சத்திரம் என்றால் என்ன..? அதனுடைய சிறப்பு என்ன என்றும் தெரியாமலே இருக்கிறது. இதன் படி பார்த்தால் ஆருத்ரா நட்சத்திரம் ஆன்மீகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் ஆருத்ரா நட்சத்திரம் என்றால் என்ன..? அது யாருக்கான நட்சத்திரம் என இதுபோன்ற தகவல்கள் அனைத்தையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

ஆருத்ரா நட்சத்திரம் என்றால் என்ன..?

ஆருத்ரா நட்சத்திரம் என்றால் என்ன

ஆருத்ரா நட்சத்திரம் ஆனது அழித்தலுக்கு உரிய தொழிலை செய்யும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதாவது பிறப்பே எடுக்காமல் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாக தான் இந்த ஆருத்ரா நட்சத்திரத்தை கூறுவார்கள். அதுவே ஆருத்ரா நட்சத்திரம் எனப்படும்.

மேலும் ஆருத்ரா நட்சத்திரத்தை தான் திருவாதிரை நட்சத்திரம் என்று கூறுகிறார்கள்.

ஆருத்ரா தரிசனம் பெயர் அர்த்தம்:

ஆருத்ரா என்பது ஒரு வடமொழி சொல். ஆகவே இத்தகைய வட மொழி சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லாக திருவாதிரை காணப்படுகிறது. எனவே இதனை தான் ஆருத்ரா தரிசனம் என்று கூறுகிறார்கள்.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன..?

ஆருத்ரா தரிசனம் ஆனது மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்த ஆருத்ர தரிசனம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஆகையால் இந்த தரிசனத்தில் சிவ பெருமானை வேண்டி நாம மனதார பூஜை செய்வதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஒரு ஐதீகமாக இருக்கிறது.

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பு:

ஆருத்ரா நட்சத்திரம்

ஒருமுறை சிவபெருமானுக்கு எதிராக முனிவர்கள் ஒரு துரிதமான நிகழ்வினை நிகழ்த்தினார்கள். அதாவது மத யானை, மான், உடுக்கை, முயலகன் மற்றும் வேள்வித்தீ என இவற்றை அனைத்தினையும் சிவபெருமான் மீது ஏவி விட்டார்கள்.

ஆனால் இவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிவபெருமான் முனிவர்கள் ஏவி விட்ட ஒவ்வொன்றையும் அவருக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு முயலகனின் மேல் தனது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடினார். இப்படிப்பட்ட சிறப்பினை கொண்ட சிவபெருமானின் தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.

இதன் படி பார்த்தால் ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களையும், ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து 36, ஸ்ரீ திருமாலுடன் 9, தேவர்களுக்காக ஆடியது 12, முருகனுடன் ஆடியது 3 மற்றும் அவர் தனியாக 48 என்றும் இவ்வாறு நடனங்களை ஆடியுள்ளார்.

அந்த வகையில் இத்தகைய சிறப்பினை ஒவ்வொரு கோவில்களும் கொண்டுள்ளது.

  • நெருப்பு- திருவண்ணாமலை
  • நீர்- திருவானைக்காவல்
  • நிலம்- திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம்
  • காற்று- காளஹஸ்தி
  • வானம்- சிதம்பரம்

மேலும் நட்சத்திரம் மற்றும் திதி எந்தப்பிர முறையில் மொத்தமாக 6 முறை சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது. அதன் படி பார்த்தால் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்புமிக்க ஒன்று.

ஆருத்ரா தரிசனம் 2023 தேதி:

2023-ஆம் ஆண்டிற்கான ஆருத்ரா தரிசனம் ஆனது டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று புதன்கிழமை வருகிறது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணமும், வாழ்க்கையும் இப்படி தாங்க இருக்குமாம் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement