எட்டு காலம் | 8 Kaalangal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மீக பதிவில் காலம் வகைகளில் மொத்தம் 8 வகை இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் எந்தெந்த நேரத்தினை குறிக்கிறது, அது என்ன மாதிரியான காலம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க 8 காலங்களுக்குரிய விளக்கத்தினை விரிவாக தெரிஞ்சிக்கலாம்..
ராகு காலம் என்றால் என்ன? |
எட்டு காலங்கள்:
காலம் நேரம் | காலம் வகை |
விடியலுக்கு முன் 3 மணி முதல் 6 மணி வரை | பிரம்ம முகூர்த்த காலம் |
அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை | தேவர்கள் காலம் |
முற்பகல் 9 மணி முதல் 12 மணிவரை | ரிஷி காலம் |
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை | பிதுர் காலம் |
பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை | சந்தியா காலம் |
முன் இரவு 6 மணி முதல் 9 வரை | பூத காலம் |
நடு இரவு 9 மணி முதல் 12 மணி வரை | பிரேத காலம் |
பின் இரவு 12 மணி முதல் 3 மணிவரை | ராட்சச காலம் |
பிரம்ம முகூர்த்த காலம்:
இந்த பிரம்ம முகூர்த்த காலத்தில் திதி, நட்சத்திரம் சரியில்லாமல் இருந்தாலும் அனைத்து விதமான நல்ல காரியங்களும் செய்யலாம்.
உதய காலம் (தேவர் காலம்):
உதய காலம் தேவர்களுக்கு உரியது என்பதால் வேளையும், நட்சத்திரமும் உகந்ததாய் இருக்க வேண்டும்.
ரிஷி காலம்:
ரிஷி கால நேரத்தில் ஏதேனும் நல்ல காரியம் செய்ய நல்ல ஓரை, நட்சத்திரம், வேளையை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
பிதுர் காலம்:
பிதுர்க்களின் காலத்தில் திதியினை பிரதானமாகவும், நட்சத்திரத்தை அடுத்தபடியாகவும் தேர்வு செய்ய வேண்டும்.
சந்தியா காலம்:
சந்தியா கால நேரத்தில் இறை வழிபாடு, ஜெபம், தவம் போன்றவற்றை மட்டுமே செய்ய உகந்த காலமாகும்.
சுபகாரியம் செய்யக்கூடாத நேரம்:
நடுப்பகல் 12 மணி அல்லது நள்ளிரவு 12 மணி அளவில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கவோ, முடிக்கவோ கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |