எண் கணிதம் ஜோதிடம் அறிவோம்..! En Kanitham Jothidam..!

En Kanitham Jothidam

எண் கணிதம் ஜோதிடம் பலன்கள் – En Kanitham Jothidam in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எண் கணிதம் ஜோதிடம் என்றால் என்ன? இவற்றில் எதுமாதிரியான பலன்கள் கிடைக்கும். இந்த எண் கணிதம் ஜோதிடத்தை எப்படி கணிக்கக வேண்டும்? இது போன்று எண் கணிதம் ஜோதிடம் பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

ஒருவருடைய வாழ்க்கைக்கு தேவையான பலன்களை இந்த எண் கணிதம் ஜோதிடம் நாம் தெரிந்துகொள்ள முடியாது என்றாலும். நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் எனபதற்கு எண் கணிதம் ஜோதிடம் மிகவும் பயன்படும். இந்த எண் கணித ஜோதிடத்தில் விதி எண் மற்றும் பெயர் எண் இரண்டு வகைகள் இருக்கின்றன. விதி எண்ணினை பயன்படுத்தி பெயர் எண்ணை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

இதற்கு நீங்கள் பிறந்த தேதியினை கொண்டு விதி எண் கணக்கிட வேண்டும். அதேபோல எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் என்பதை விதி எண் பொறுத்து எந்த எண்கள் நட்பு மற்றும் பகை என்றும் அவற்றை கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

எண் கணிதம் ஜோதிடம்..! En Kanitham Jothidam..!

இந்த எண் கணித ஜோதிடத்தில் எழுத்துக்கான எண்களை நிர்ணயிக்கும்பொழுது ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். எனவே ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

ஆங்கில எண் கணிதம்

A, I, J, Q, Y – 1
B, K, R – 2
C, G, L, S – 3
D, M, T – 4
E, H, N, X – 5
U, V, W – 6
O, Z – 7
F, P – 8

மேற்கண்ட எண் 8 வரை ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இருக்கும். எண் 9-யின் ஆளுமைக்குட்பட்ட எழுத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று முதல் ஒன்பது எண்களுக்கான கிரகங்கள்:

சூரியன் – எண் 1
சந்திரன் – எண் 2
குரு – எண் 3
ராகு – எண் 4
புதன் – எண் 5
சுக்கிரன் – எண் 6
கேது – எண் 7
சனி – எண் 8
செவ்வாய் – எண் 9

மேல் கூறப்பட்டுள்ள எண்ணிற்கும் அதனுடைய ஆதிக்க கிரகங்களை கொண்டுள்ளது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்றால்.. விதி எண் மற்றும் பெயர் ஆகியவற்றை கொண்டு பயன்படுத்தலாம். இது என்ன விதி எண்.. விதி எண்ணை எப்படி தெரிஞ்சிக்கிறதுனு யோசிப்பிங்க.. விதி எண் கணக்கிடுவது எப்படி என்று பின்வருவனவற்றுள் பார்க்கலாம்..

விதி எண் கணக்கிடுவது எப்படி?

ஒருவருடைய பிறந்த ஆங்கில தேதியில் வரும், தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே அந்த ஜாதகக்காரரின் விதி எண் ஆகும். இந்த விதி எண்ணை எப்படி கணக்கிடலாம் என்றால்?

உதாரணத்திற்கு 26.03.1994 என்ற தேதியில் ஒருவர் பிறந்திருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள் 2+6+0+3+1+9+9+4=34 என வரும் 3+4=7 எனவே இந்த ஜாதகரின் விதி எண் 7 ஆகும். அடுத்து பெயர் எண் எப்படி கணக்கிட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பெயர் எண் கணக்கிடுவது எப்படி?

ஒரு ஜாதகரின் பெயரை கொண்டு கணக்கிடுவதே பெயர் எண் ஆகும். ஜாதகரின் பெயர் S.VARUN என வைத்துக்கொள்வோம். மேற்கூறிய அட்டவணையில் எழுத்துக்கான எங்களை கொண்டு பெயர் எண் கணக்கிட வேண்டும்.

S.VARUN
3+6+1+2+6+5=23, 2+3=5 எனவே இந்த பெயருக்கான பெயர் எண் 5 ஆகும்.

ஒருவருடைய விதி எண்ணை கொண்டு அதே எண்

ஒருவருடைய விதி எண் கொண்டு அதே எண் மற்றும் அதற்கு நட்பு எண் வரும்படி பெயரை வைத்தால் ஜாதகரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பின்வருவனவற்றுள் எண்ணிற்கு வரும் நட்பு எண்ணை காண்போம்.

நடபு எண்கள்:

எண் 1 – நட்பு எண் 4
எண் 2 – நட்பு எண் 7
எண் 3 – நட்பு எண் 9
எண் 4 – நட்பு எண் 1
எண் 5 – நட்பு எண் 6
எண் 6 – நட்பு எண் 9
எண் 7 – நட்பு எண் 2
எண் 8 – நட்பு எண் 5
எண் 9 – நட்பு எண் 6

எண் கணிதம் ஜோதிடம் படி குழந்தைக்கு பெயர் வைக்கும் நினைக்கும் பெற்றோர்கள். மேல் கூறப்பட்டுள்ளது படி விதி எண் கணக்கிட்டு பின்பு அதே எண் அல்லது அதனுடைய நட்பு எண் வரும்படி பெயர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்