தீய சக்திகளை அகற்றும் எலுமிச்சை – வாசலில் எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம் திருஷ்டி – பொதுவாக ஆன்மிகத்தில் திருஷ்டியை போக்குவதற்க்காக எலுமிச்சை பழத்தை அதிகளவு பயன்படுத்துவார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பலர் பேர் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை சரி பாதியாக கட் செய்து அவற்றில் குங்குமம் தடவி வைத்திருப்பார்கள். இவ்வாறு கட் செய்து குங்குமம் தடவி வீட்டு நிலைவாசலில் வைப்பதினால் திருஷ்டியை போக்குமா என்பதை பற்றி தான் இன்றைய பதிவு.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அஷ்டமி, நவமி, அமாவாசை போன்றவை நல்ல நாட்களா..? கெட்ட நாட்களா..?
வீட்டு வாசலில் எலுமிச்சை வைக்கும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
உண்மையில் எலுமிச்சை பழம் திருஷ்டியை தாண்டி எதிர்மறையான விஷயங்களை நமது வீட்டில் அண்டவிடாது.
ஆக எலுமிச்சை பழத்தை கட் செய்து நமது வீட்டு வாசலில் வைக்கலாம். இருபுறமும் அதனை எந்த கிழமையில் வைக்க வேண்டும் என்றால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வைப்பது மிகவும் சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி வைக்கும் போது அவற்றில் குங்குமம் தடவி வைக்க வேண்டும். இதனை வாரத்திற்கும் ஒருமுறை மாற்றிவிடுவது மிகவும் சிறந்தது.
வெளியிடங்களுக்கு செல்லும் போது எலுமிச்சை பழத்தை பூஜையறையில் வைத்து வழிபாடு செய்துவிட்டு உங்கள் கையில் எடுத்துச்செல்லலாம்.
சிலர் எலுமிச்சம்பழத்தை கோவிலில் இருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் திருஷ்டி கழிக்க பயன்படுத்துவார்கள் அப்படி செய்யக்கூடாது. வீட்டில் உள்ள எலுமிச்சையை மட்டுமே திருஷ்டி சுத்த பயன்படுத்த வேண்டும். கோவிலில் கொடுத்ததை கண்டிப்பாக திருஷ்டி சுத்திப்போட பயன்படுத்தக்கூடாது.
கோயிகளில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை மஞ்சள் அல்லது சிவப்பு துணியில் வைத்து கட்டி நிலைவாசலின் மேல் கட்டிவிட்டால் வீட்டில் உள்ள எதிர்மறையான ஆற்றல் அனைத்தும் நீங்கி, நேர்மறையான ஆற்றல்களை அதிகரிக்க செய்யும்.
ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி வீசி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சம்பாதித்த பணம் வீட்டில் தங்கவில்லையா..! அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |