ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது தெரியுமா?

Advertisement

ஏப்ரல் மாத ராசி பலன்

ஜோதிட ரீதியாக ஏப்ரல் மாதம் என்பது அனைவருக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம்ஏற் படும். இந்த காரணமாக கிரகங்களின் சஞ்சாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். இந்த கிரகமாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரும் மேலும் சில ராசிக்காரர்கள் சிரமங்களை தரும். ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்பதை பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2022 – April Matha Rasi Palan 2022 in Tamil

ரிஷபம்:

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும். ஏப்ரல் மாதம் ராகுவின் ராசி மாறப்போகிறது. தற்போது ராகு உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். ராகு உங்கள் ராசியை விட்டு வெளியேறிய உடன் வாழ்க்கையில் தடைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும். வீட்டில் இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஏப்ரல் மாதத்தில் பல காரியங்களில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் அலுவகத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்பு தங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும்அமைதியான சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் லட்சுமி தேவி உங்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை தருவார். இதன் காரணமாக உங்கள் நிதிநிலைமை வளர்ச்சிகரமானதாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நன்மையான பலன்களை தரும். இதனால் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். ஏப்ரலில் கேது உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார். அதன் பிறகு தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். தங்கள் காதல் விஷயத்தில் வெற்றி உண்டாகும். பண வரவு இந்த ஏப்ரல் மாதம் தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். முதலீடு செய்வதற்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் இந்த மாதம் முழுவதும் அன்பு அதிகரித்து காணப்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் தங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வளர்ச்சிகரமானதாக இருக்கும். சனி பகவானால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த மாதம் குறையும். குறிப்பாக இந்த மாதம் தங்களுக்கு லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்கு சாதகமான காலம். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல இடத்தில் வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெரு கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நிகழும். இந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நாளைய ராசி பலன்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement