ஏழரை சனி பரிகாரம்
நவகிரங்களில் நீதிமானாக திகழும் சனி பகவான் அவர்கள், பெயறர்ச்சியின்போது பல கஷ்டங்களை கொடுப்பார். சனி பகவானின் பிடியில் இருக்கிறோம் என்பதை நாம் நமக்கு நடக்கும் சில விஷயங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருக்கும். நமக்கு நடக்கும் ஒவ்வொரு காரியமும் நமக்கு அடுத்ததடுத்து பல கஷ்டங்களை கொடுக்கும். சனி பெயர்ச்சியில் பல வகைகள் உள்ளது. அதில் ஏழரை சனி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால், ஏழரை சனிக்கான பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
ஏழரை சனி என்பது, சனி பகவான் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருக்கும் காலமாகும். சனிபகவான் 12,1,2,4,5,7,8,9,10 ஆகிய இடங்களுக்கு வரும் போதெல்லாம் நம்மை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார். எனவே, ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சங்கடங்களை தீர்க்கும் சனிபகவானின் காயத்ரி மந்திரம்..!
ஏழரை சனி தாக்கம் குறைய பரிகாரம்:
- ஏழரை சனி தாக்கம் குறைய சிறந்த வழி தானம் அளித்தல் ஆகும். ஆகையால் முடிந்தவரை பிறருக்கு உதவியும் தானமும் செய்து வாருங்கள். நம் வீடுகளில் இருக்கும் ஆடை போன்று நமக்கு பயன்படாமல் இருக்கும் பொருட்களை, ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் தானமாக அளிக்க வேண்டும்.
- அன்னதானம் செய்து வர வேண்டும். நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும். மேலும், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்.
- சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல் வேண்டும்.
- தினமும் காகத்திற்கு கருப்பு எள் கலந்த உணவினை அளிக்கவேண்டும். மேலும், காகம் கூடு கட்டிருக்கும் இடத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும்.
- முடிந்தவரை அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக சனிக்கிழமை அன்று அசைவ உணவுகளை சாப்பிட்ட கூடாது.
- தினமும், சூரிய நமஸ்காரம் செய்து விட்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வழிபட வேண்டும்.
- சனிப்பிரதோஷம் அன்று சிவபெருமானிற்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும், பைரவர் வழிபாடு மற்றும் அனுமாரை வழிபாடு செய்து வர வேண்டும்.
- ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும்.
- சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் ஏழரை சனி பாதிப்பு குறையும். சனிக்கிழ்மையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக கிழக்கு திசையில் நின்று தலையில் மட்டும் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து வைத்து குளிக்க வேண்டும்.
- முக்கியமாக, பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
- சனி ஹோரை நேரங்களில் எட்டு இரும்பு வளையங்களை வாங்கி, ஓடும் நீரில் தெற்கு முகமாக நின்று அந்த வளையங்களை விட வேண்டும்.
- மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரந்தை உச்சரிக்க வேண்டும்.சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா - சனிபகவான் என்பவர் நீதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்ட நீதி அரசன். இவர், மனிதர்கள் செய்யும் நற்செயல்கள் மட்டும் பாவ செயல்களை அறிந்து ஒவ்வொரு ராசிக்கும் அஷ்டமாத்து சனி, கண்டக சனி, அஷ்டம சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனி வரும் நேரத்தில் அவர்க்ளின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குவார்.
- எனவே, நீங்கள் மற்றவர்களுக்கு எந்தவொரு தீங்கினை செய்யாமல் நல் உள்ளத்துடன் இருந்தால் மட்டுமே உங்களுக்கு சனி பாதிப்பு என்பது இருக்காது.
சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |