ஐந்து எழுத்து மந்திரம்..!

Advertisement

Ainthu Eluthu Manthiram

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில், ஐந்து எழுத்து மந்திரம் பற்றி பார்க்கலாம். பொதுவாக நமக்கு கஷ்டங்களை கொடுப்பதும் கடவுள் தான் கொடுத்த கஷ்டத்தை தீர்த்து வைப்பதும் கடவுள் தான். இதனால் தான் நாம் அனைவருமே நமக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது மனம் நிம்மதியில்லாமல் இருந்தாலோ கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டு வருவோம். கடவுளை வழிபடுவதாடு கடவுளுக்குரிய பாடலையோ அல்லது மந்திரத்தையோ உச்சரிப்பதும் வழக்கம். அந்த வகையில், இப்பதிவில் நம் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் ஐந்து எழுத்து மந்திரம் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

ஐந்து எழுத்து மந்திரம்:

ஐந்து எழுத்து மந்திரம்

சைவ சமயத்தின் மூல மந்திரம் “நமசிவாய” என்னும் திருவைந்தெழுத்து மந்திரமாகும். அதாவது, ஐந்து எழுத்து மந்திரம் என்பது “நமசிவாய” என்னும் சிவனுக்குரிய மந்திரமாகும். இதனை, பஞ்சாட்சரம் எனவும் அழைப்பார்கள். பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல்லை ஐந்தெழுத்து என்ற தமிழ் சொல்லுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இம்மந்திரம் இந்து வடிவங்களிலும் உள்ளது. அவை பின்வருமாறு:

  1. தூல பஞ்சாட்சரம் – நமசிவய 
  2. சூட்சும பஞ்சாட்சரம் – சிவயநம
  3. ஆதி பஞ்சாட்சரம்- சிவயசிவ
  4. காரண பஞ்சாட்சரம் – சிவசிவ
  5. மகாகாரண பஞ்சாட்சரம் (ஏக பஞ்சாட்சரம்) – சி

தூல பஞ்சாட்சரம் – நமசிவய 

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் உள்ள ஐந்து எழுத்துக்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

  • ந – என்பது திரோதாண சக்தி
  • ம – என்பது ஆணவமலம்
  • சி-  என்பது சிவம்
  • வா – என்பது திருவருள் சக்தி
  • ய – என்பது ஆன்மா

இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் அனைவரும் உச்சரிக்க வேண்டிய மந்திரமே “நமசிவாய” ஆகும்.

சூட்சும பஞ்சாட்சரம் – சிவயநம:

“சிவாய நம” என்று உச்சரிப்பவர்களுக்கு இவ்வாழ்க்கையில் ஒரு நாளும் அபாயம்  இல்லை என்பது அர்த்தமாகும்.

  • சி- உடுக்கை ஏந்திய திருக்கரம்
  • வா –  தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரம்
  • ய – அஞ்சேல் என்ற வலது அபய கரம்
  • ந – அனலேந்திய இடக்கரம்
  • ம -முயலகன் மீது ஊன்றிய திருவடி

தோடுடைய செவியன் பாடல் வரிகள்..!

ஆதி பஞ்சாட்சரம்- சிவயசிவ:

  • சி – என்பது சிவபெருமான்
  • வா – என்பது லோகமாதாவான அம்பிகை
  • ய- என்பது ஜீவாத்மாக்களான மனிதர்கள்
  • நம – என்பது மும்மலங்கள் ( மாயாமலம், ஆணவ மலம், கன்மலம்)

காரண பஞ்சாட்சரம் – சிவசிவ:

‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை உச்சரித்து உன்னத முக்திநிலையை அடையலாம்.

மகாகாரண பஞ்சாட்சரம் (ஏக பஞ்சாட்சரம்) – சி:

‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது.

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement