Odi Vaa Muruga Song Lyrics in Tamil
பெரும்பாலானவர்கள் வீட்டில் காலை மற்றும் மாலை நேரத்தில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள். இப்படி பூஜை செய்வதால் அவர்களுக்கு நேர்மறை எண்ணம் அதிகரிப்பதாக நினைக்கிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளையும் வணங்குவார்கள். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும்.
அதுமட்டுமில்லாமல் கடவுளை வணங்கும் அவர்களுக்குரிய பூ, மாலை, பிரசாதம் போன்றவற்றை வைத்து வாங்குவார்கள். இப்படி வணங்குவதால் அவருடைய அருள் முழுமையாக கிடைப்பதாக நம்பப்படுகிறது. அதோடு அவர்களுக்கு உரிய ஸ்லோகங்கள், மந்திரங்கள் போன்றவற்றையும் பாடுவார்கள். அதனால் தான் இந்த பதவில் ஓடி வா முருகா பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.
ஓடி வா முருகா பாடல் வரிகள்:
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
ஓடி வா கந்தா
நீ ஓடி வா முருகா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
கணபதி சகோதரனே
ஓடி வா முருகா
கண்கண்ட தெய்வமே
நீ ஆடி வா முருகா
ஆறுமுக வேலனாக
ஓடி வா முருகா
ஏறுமயில் ஏறி
நீ ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தெய்வானை வள்ளியோடு
ஓடி வா முருகா
செந்தில் வடிவேலனே
நீ ஆடி வா முருகா
ஆறுமுக தோற்றத் தோட
ஓடி வா முருகா
அரோகரா அரோகரா
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தை மாதம் பிறந்திடவே
ஓடி வா முருகா
தை மாதம் பிறந்திடவே
ஓடி வா முருகா
தரணியில் கொண்டாட்டமா
ஆடி வா முருகா
மலை மேலே தேரோட்டமா
ஓடி வா முருகா
மலைக்கு கீழே பக்தராட்டம்
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
பாலோடு பஞ்சாமிர்தம்
ஓடி வா முருகா
பாலோடு பஞ்சாமிர்தம்
ஓடி வா முருகா
பழநி மலை ஆண்டியாக
ஆடி வா முருகா
தைப்பூச திருநாளில்
ஓடி வா முருகா
தங்கத்தேரு பவனியிலே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
அடிவாரம் சுத்தி வந்தோம்
ஓடி வா முருகா
அடிவாரம் சுத்தி வந்தோம்
ஓடி வா முருகா
ஆண்டி உன்னை காண வாரோம்
ஆடி வா முருகா
அருளை எல்லாம் தருபவனே
ஓடி வா முருகா
அன்னை சக்தி பாலகனே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது பாடல்
பன்னீர் அபிஷேகனாக
ஓடி வா முருகா
பன்னீர் அபிஷேகனாக
ஓடி வா முருகா
பழநி மலை முருகனாக
ஆடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தங்கரத மீதமர்ந்து
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தண்டபாணி தெய்வமே
நீ ஓடி வா முருகா
தங்கரத மீதமர்ந்து
ஆடி வா முருகா
தொண்டர்களை காத்திடவே
ஓடி வா முருகா
கொண்டாடும் உள்ளங்களில்
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
கூட்டமாக குரல் கொடுத்தோம்
ஓடி வா முருகா
கூட்டமாக குரல் கொடுத்தோம்
ஓடி வா முருகா
ஆட்டம் ஆடி வாட்டம் தீர்க்க
ஆடி வா முருகா
ஆறுமுக பேரழகா
ஓடி வா முருகா
ஆறுமுக பேரழகா
ஓடி வா முருகா
ஆறுதலை தந்திடவே
ஆடி வா முருகா
ஓடி வா முருகா
நீ ஓடி வா கந்தா
உமையவள் நன்மகனே
ஓடி வா முருகா
எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |