கஜகேசரி யோகம் பலன்கள் | Gaja Kesari Yogam Palangal in Tamil

Advertisement

கஜகேசரி யோகம் எப்போது பலன் தரும் | Gaja Kesari Yogam in Tamil

கஜ கேசரி யோகம்: ஆன்மீக அன்பர்களுக்கு அன்பான வணக்கம்.. இன்றைய ஆன்மீக பதிவில் கஜகேசரி யோகம் என்றால் என்ன?, அந்த யோகத்தினால் என்ன பலன்கள் என்பதை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம். யோகம் வகைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது இந்த கஜகேசரி யோகம். பெரும்பாலோனோர் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் ஜோதிடம் பார்த்து பண்ணுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வாங்க இந்த பதிவில் கஜகேசரி யோகம் (gajakesari yogam in tamil) பற்றிய ஆன்மீக தகவலை படித்தறியலாம்.

சூரிய திசை யாருக்கு யோகம் தரும்..!

கஜகேசரி யோகம் என்றால் என்ன:

சந்திரனில் இருந்து 1,4,7,10 வீடுகள் என்ற “கேந்திரம்” வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரி யோகமாக கருதப்படுகிறது. கஜா என்றால் யானை என்றும், கேசரி என்றால் சிங்கம் என்று பொருளாகும்.

கஜகேசரி யோகம் நன்மைகள்:

  • இந்த கஜகேசரி யோகத்தினால் ஒரு ஜாதகர் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மக்கள் செல்வாக்குப் போன்றவை ஏற்படும்.
  • மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் புகழ், பல தலைமுறைக்கு பணம், நல்ல மகன்கள் மற்றும் மகளை கொடுக்கும்.
  • ஒரு ஜாதகருக்கு இந்த “கஜகேசரி யோகம்” மட்டும் சிறந்த முறையில் அமைந்திருந்தால், அவருக்கு “அட்சய பாத்திரமே” கிடைத்தார் போன்றது தான். ஏனெனில், இந்த யோகத்தின் அமைப்புப்படி சந்திர பகவான் இவர் உண்ணும் உணவுக்கான உத்திரவாதத்தை அளிக்கிறார்.
  • பகைவரால் எந்த தீங்கும் ஏற்படாது.
  • மேலும் இந்த ஜாதகக்காரர்களுக்கு நல்லொழுக்கம், பெரும் செல்வம், உயர்கல்வி, உயர்குடும்பம், மரணத்திற்கு பிறகும் அவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

Gaja Kesari Yogam Palangal in Tamil:

  • கஜகேசரி யோகம் எப்போது பலன் தரும்: தனுசு ராசியில் குரு இருக்க, சந்திரனானது மீன ராசியில் இருக்க வேண்டும்.
  • ரிஷப ராசியில் சந்திரன் இருக்க குடும்பத்தில் குரு இருப்பது மட்டும்தான் கஜகேசரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குரு அல்லது சந்திரன் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே..
  • இந்த கஜகேசரி யோகமானது பல ஜாதகத்தில் தோன்றக்கூடும். அது கிரக நிலைகளை பொறுத்து அமையும்.
  • இந்த ஜாதகத்தினருக்கு சிறந்த இடத்தில் திருமணம் ஆகக்கூடும்.
மரண யோகம் என்றால் என்ன?

 யோகம்:

  • இந்த யோக (gajakesari yoga in tamil) காலகட்டத்தில் பெண்களால் இவர்களுக்கு தன லாபம் கிடைக்கும். இதற்கு காரணம் சந்திரன் பெண் தன்மை கொண்டவர் என்பதால்.
  • சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

எல்லோருக்கும் நன்மை கிடைக்குமா?

  • இந்த கஜகேசரி யோகமானது எல்லோருக்கும் நன்மை செய்யுமா என்று கேட்டால் இல்லை என்பதுதான் இதற்கு பதில்.
  • இதற்கு காரணம் சந்திரனும், குருவும் இந்தக் கேந்திர ராசிகளில் இருப்பதால் மட்டும், மற்றக் கிரகங்களின் தாக்கம் ஜாதகருக்கு இருக்காது என்று அர்த்தமல்ல.
  • இது போன்ற எண்ணற்றத் தடைகளைக் கடந்து அனைத்து கிரக நிலைகளும் ஜாதகத்தில் சரியாக அமைய பெற்றால் மட்டுமே இந்த கஜகேசரி யோகம் முழுமையான பலன்களை கொடுக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement