கடன் தொல்லையை காணாமல் போகச் செய்யும் பதிகம்..!

Advertisement

Kadan Theerkum Pathigam in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கடன் பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். காரணம் பணம் தான். இந்த கடன் பிரச்சனை இல்லாத வீடுகள் என்று இருக்கவே முடியாது. நாமும் பணத்தை எவ்வளவு தான் சேமித்து மிச்சம் செய்து வந்தாலும் கடன் மட்டும் அடையவே இல்லை என்று இங்கு பலரும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பதிவின் வாயிலாக கடன் பிரச்சனை அடியோடு தீர படிக்க வேண்டிய பதிகம் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி வாங்க பிரண்ட்ஸ் கடன் தொல்லை தீர்க்கும் பதிகத்தை படித்து தெரிந்து கொள்வோம்.

வீட்டில் பணம் குறையாமல் அள்ளி அள்ளி தரும் பதிகம்..

கடன் பிரச்சனை தீர பதிகம்:

இந்த பதிகத்தை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார். ஆகவே இந்த பதிகம் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. திருநாவுக்கரசரால் அருளப்பட்ட இந்த பதிகம் திருச்சேறை என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள செந்நெறியப்பர் என்னும் சாரபரமேஸ்வரன் மீது பாடப்பட்டதாகும்.

எவரொருவர் இந்தப் பதிகங்களை மனமுருகப் பாடி, சிவபெருமானை வேண்டிக்கோள்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் கடன் பிரச்சினைகளெல்லாம் தீரும் என்பது உறுதி என்கிறார்.

1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுடண செற்நெறி
நாரி யாகன்றன் நாம நவிலவே.

2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம் வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

4. மாடு தேடி மயங்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே

5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.

8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

வீட்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு பணம் சேர வேண்டுமா ? ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் மட்டும் போதும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement