Kadan Prachanai Theera Valigal
கடன் பிரச்சனை என்பது யாருக்கு தான் இல்லாமல் உள்ளது. ஏனென்றால் நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அதிகமாக தேவைகள் வரும்போது வேறு வழி இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு நாம் வாங்கும் கடன் ஆனது சில நேரத்தில் பெரியதாகக் கூட வாங்கும் நிலைமை ஏற்படும். அதனால் உரிய நேரத்தில் கடனை அடைக்க முடியாமல் போகும் சூழல் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு தொடர்ந்து கடனை அடைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் நமக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உடனே ஆன்மீகத்தில் ஏதாவது பரிகாரங்களை செய்ய தொடங்கிவிடுவோம். ஆகவே இன்று எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதனை எளிய முறையில் அடைப்பதற்கான ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கடன் பிரச்சனை தீர வழி:
கடன் பிரச்சனை தீருவதற்கும், பணம் வீட்டில் பெருகுவதற்கும் ஆன்மீகத்தில் வசம்பு மற்றும் கல் உப்பு ஆனது ஆன்மீகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இன்று வசம்பு வைத்து செய்யக் கூடிய ஒரு பரிகாரத்தை தான் செய்ய போகிறோம்.
- வசம்பு- 1
- அன்ரூல்டு பேப்பர்- 1
- பச்சை கற்பூரம்- சிறிதளவு
- கண்ணாடி பாட்டில்- 1
இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்
Kadan Thollai Theera Pariharam:
முதலில் நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு விளக்கினை ஏற்றி கொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீர்ந்து பணம் சேர வேண்டும் என்று நினைத்து குலதெய்வத்தை வழிபட்டு கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வசம்பினை எடுத்துக்கொண்டு அந்த அகல் விளக்கில் நன்றாக சுட்டு எடுத்துக்கொண்டு அதனை ஆற வைத்து விடுங்கள்.
அடுத்து ஒரு அன்ரூல்டு பேப்பரில் சுட்டு வைத்துள்ள வசம்பினால் என்னுடைய கடன் விரைவில் தீர வேண்டும் என்று எழுதி பேப்பரை மடித்து வைத்து கொள்ளுங்கள்.
கடைசியாக 1 கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொண்டு அதில் பச்சை கற்பூரத்தை சேர்த்து அதில் எழுதி வைத்துள்ள பேப்பரை வைத்து பாட்டிலை மூடி யாருக்கும் கண்ணில் தென்படாத இடத்தில் வைத்து விடுங்கள்.
இத்தகைய பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்த கையோடு கடன் பிரச்சனை தீர என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.
மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்த பிறகு அந்த பேப்பரை கிழித்து போட்டு விடுங்கள்.
எப்பேர்ப்பட்ட கடனையும் காணாமல் போவதற்கு வெல்லம் மட்டும் போதும்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |