கடன் பிரச்சனை முழூவதும் விலக | Kadan Theera Manthiram

Kadan Theera Manthiram

கடன் பிரச்சனை தீர மந்திரம் | Kadan Prachanai Theera Manthiram

சிறுவயதில் இருக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருப்போம், அதுவே வளர்ந்து ஒரு பொறுப்பு வந்துவிட்டால் சிலவகையான பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிப்போம். அப்படி சந்திக்கும் பிரச்சனையில் மிகவும் முக்கியமான ஒன்று கடன் பிரச்சனை தான். அவசர தேவைக்காக ஒரு முறை கடன் வாங்கினால் அது ஒரு சங்கிலி தொடர்போல தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த கடனை தீர்ப்பதற்கு நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது தீர்வதற்கு நெடுங்காலம் ஆகும். இதற்கு சில கிரக நிலைகள் காரணமாக இருக்கலாம். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் கடன் தீர்வதற்கு எந்த கடவுளை வழிபட வேண்டும் மற்றும் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.

கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:

  • Kadan Prachanai Theera in Tamil: கடன் பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கு செவ்வாய் பகவான் உதவி செய்வார். அவருடைய மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் கடன் பிரச்சனை மட்டுமல்ல, கொடுத்த கடனும் திரும்ப கிடைக்கும். எதிர்காலத்தில் கடன் பிரச்சனை எதுவும் வர கூடாது என நினைப்பவர்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

செவ்வாய் பகவான் மந்திரம்:

ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி!
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி!
ஓம் முருகனின் உருவே போற்றி!
ஓம் மேஷ ராசிப் பிரியனே போற்றி!
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி!

ஓம் தென் முகத்தவனே போற்றி!
ஓம் தேவியின் பிரியனே போற்றி!
ஓம் பூமியின் புதல்வனே போற்றி!
ஓம் சகோதர காரகனே போற்றி!
ஓம் குஜனே போற்றி!

ஓம் ரணகாரனே போற்றி!
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி!
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி!
ஓம் மகீ சுதனே போற்றி!
ஓம் நவநாயக உருவே போற்றி!

வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்

கடன் தீர மந்திரம்:

  • Kadan Prachanai Theera Pariharam: செவ்வாய் கிழமையில் மேலே கூறப்பட்டுள்ள மந்திரத்தை 9 முறை சொல்லி ஒரு மஞ்சள் துணி அல்லது சிவப்பு துணியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்.
  • மனதில் நம்பிக்கையுடன் கடன் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இதை நவகிரகக்கோவில் அல்லது செவ்வாய் பகவான் கோவிலில் உள்ள உண்டியலில் போட வேண்டும்.
  • இந்த பரிகாரத்தை செய்து விட்டு குளிகை நேரத்தில் கடன் கொடுத்தவரிடம் கடனின் ஒரு பகுதியை கொடுத்து வந்தால் உங்கள் கடன் விரைவாக தீர்ந்துவிடும்.

Kadan Prachanai Theera Valigal:

  • தீராத கடன் பிரச்சனையில் இருந்து விலக செவ்வாய் பகவானை போல லட்சுமி நரசிம்ம பெருமாளை வழிபடலாம். இவரை பௌர்ணமி, பிரதோஷம், சுவாதி நட்சத்திரத்தில் அபிஷேக பொருட்களை வைத்து வழிபட வேண்டும்.

லட்சுமி நரசிம்மரின் மந்திரம்:

“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”

கடன் தீர மந்திரம்:

  • இந்த மந்திரத்தை 12 முறை கூறி வந்தால் கடன் பிரச்சனை நீங்கி உங்களுக்கு நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்.
  • செவ்வாய் கிழமைகளில் கடனை திருப்பி கொடுப்பது நல்லது. செவ்வாய், சனிக்கிழமைகளில் கடன் வாங்காமல் இருப்பது சிறந்தது.
பணம் சம்பாதிக்க மந்திரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்