வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடவுளுக்கு ஆகாத பூக்கள் எது தெரியுமா..?

Updated On: April 22, 2024 7:34 PM
Follow Us:
Kadavulukku Agatha Pookal in Tamil
---Advertisement---
Advertisement

Kadavulukku Agatha Pookal in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் கடவுளுக்கு ஆகாத மலர்கள் என்னென்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். நாம் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினாலும் சரி, அல்லது வீட்டில் பூஜை செய்தாலும் சரி மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் எந்த கடவுளுக்கு எந்த பூக்கள் வைக்க வேண்டும் என்றும், எந்த பூக்கள் ஆகாதது என்றும் நம்மில் பலருக்கும் தெரியாது. அதனால் இந்த பதிவின் மூலம் கடவுளுக்கு ஆகாத மலர்கள் எது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.

பூஜைக்கு உகந்த மலர்கள்

பூஜைக்கு வைக்க கூடாத பூக்கள்:

பூஜைக்கு வைக்க கூடாத பூக்கள்

பொதுவாக இந்து சமயத்தில் இறைவனுக்கு பூக்கள் வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி நாம் கடவுளுக்கு என்னென்ன பூக்கள் வைக்க வேண்டும்..? என்னென்ன பூக்கள் வைக்க கூடாது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். ஆகையால் பூஜைக்கு எந்த மாதிரி பூக்கள் வைக்க கூடாது என்று பார்க்கலாம் வாங்க.

  • அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்ட பூக்கள்
  • தானாக கீழே விழுந்து கிடக்கும் பூக்கள்
  • காய்ந்த பூக்கள்
  • மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டபூக்கள்
  • அசுத்தமான இடங்களில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள்
  • அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்ட பூக்கள்
  • பறித்த பிறகு மலர்ந்து போன பூக்கள்
  • வாடிப்போன பூக்கள்
  • பழைய பூக்கள்
  • ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள்
  • பூச்சிகள் கடித்த பூக்கள்
  • சிலந்தி இழை சுற்றிய பூக்கள்
  • பறவைகள் எச்சமிட்ட பூக்கள்
  • இரவு நேரத்தில் பறித்த பூக்கள்
  • தண்ணீரில் முழுகிய பூக்கள்

இதுபோன்ற பூக்களை நாம் பூஜையில் வைத்து வழிபட கூடாது.

அதிர்ஷ்டம் உண்டாக பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள்

கடவுளுக்கு ஆகாத பூக்கள்:

பூஜைக்கு வைக்க கூடாத பூக்கள்

அதுபோல ஒரு சில கடவுளுக்கு ஒரு சில பூக்கள் ஆகாத பூக்களாக இருக்கும். அது என்னென்ன பூக்கள் என்று தற்போது பார்க்கலாம் வாங்க.

  • விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது. மேலும், வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாத பூக்கள் ஆகும்.
  • சிவபெருமானுக்கு தாழம்பூ கொண்டு பூஜை செய்ய கூடாது. அதாவது செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.
  • அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் போன்ற பூக்களை அம்மனுக்கு வைத்து வழிபடக்கூடாது.
  • வில்வம் கொண்டு சூரியனுக்கு அர்ச்சனை செய்ய கூடாது.
  • துளசி கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்ய கூடாது.
  • பவள மல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்ய கூடாது.
  • லட்சுமிக்குத் தும்பை பூ கொண்டு அர்ச்சனை செய்ய கூடாது.
  • துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது.
  • ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.
  • செண்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
  • மலரை இதழ் இதழாக ஆய்ந்து அர்ச்சனை செய்யக்கூடாது.

இதுபோல அந்தந்த கடவுளுக்கு உகந்த பூக்களை சரியாக வைத்து வழிபட வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now