பணம் கஷ்டம் வராமல் இருக்க கடிகாரம் வைக்கும் திசை

Advertisement

கடிகாரம் வைக்கும் திசை – Kadikaram Vaikum Thisai in Tamil

கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டும் இல்லை. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதற்கு கூடவும் இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கிறது. இது நம்மில் பலருக்கு தெரிவதில்லை நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நம் கடிகாரம் மாட்டி இருக்கும் திசையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்.

எந்த திசையில் வைத்தால் வீட்டின் வறுமை நீங்கும், அதிலும் குறிப்பாக அது என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும். என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பலகுழப்பங்களுக்கான தீர்வை தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

இந்த பூமியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் போது சுழலுகின்ற கால சக்கரங்களை நமக்கு வலியுறுத்துவதே இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைத்து இல்லை, வானத்தை பார்த்து, வானத்தில் உள்ள சூரியனை பார்த்து தான் நேரத்தை கழித்துள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் இன்றிய காலத்தில்  நம் அனைவரின் வீட்டிலும் கடிகாரம நிச்சயம் இருக்கும்.

சுவரில் தொங்கவிடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும், அதையே தவறான திசையில் மாட்டினால், எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். சரி வாங்க கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்?

முன்னேற்றம் பெற:

நமது முன்னேற்றம் தடைபடாமல் இருக்க நம் வீட்டில் கடிகாரம் இருக்கக்கூடிய திசையை வடக்கு திசையில் இருக்க வேண்டும். ஆக வடக்கு பக்க இருக்கும் சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும்.

அந்த கடிகாரம் தெற்கு பார்த்தபடி இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் உங்களுடைய வீட்டில் பணம் கஷ்டம் வரவே வராது.

மேலும் நமது பொருளாதாரம் உயர்ந்துகொண்டே இருக்கும் என்று கூறபடுகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மட்டுப்படும் கடிகாரம் வட்டவடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலன்களை பெற்றுத்தரும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்க:

வீட்டில் நோய் நொடிகள் இல்லாமல் இருக்க, குடும்ப தலைவருக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்க வீட்டின் கிழக்கு திசையில் கடிகாரத்தை மாட்டி வைக்கவும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தபடி இருக்கும்.

கிழக்கில் மாட்டப்படும் கடிகாரமானது பிரவுன் நிறத்தில் இருந்தால் நல்ல பலன்களை தரும். மேலும் கிழக்கு திசை உள்ள சுவற்றில் மாட்டி வைக்கும் கடிகாரம் வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் இருந்தால் மிகவும் சிறப்பு.

சிலரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓசையை எழுப்பும் கடிகாரம் இருக்கும். அப்படி இருக்கும் கடிக்கறதை கிழக்கு இருக்கும் சுவற்றில் மாட்டி வைப்பது சிறப்பு. இதனால் உங்கள் வீட்டில் செல்வ செலுத்து மேலும் அதிகரிக்க கூடும்.

உங்களால் வடக்கு திசையும் கடிகாரத்தை மாட்டமுடியவில்லை அதேபோல் கிழக்கு திசையிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை என்றால் மேற்கு திசையில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்கலாம். இருப்பினும் எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது.

இதற்கு என்ன காரணம் என்றால் கடிகாரத்தில் முள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டு இருக்கும் போது அவற்றில் ஒரு விதமான சத்தம் கேக்கும், பொதுவாக அது நம் காதுகளுக்கு கேக்காது சில சமயம் அமைதியாக இருக்கும் போது சந்தம் கேக்கும் அல்லவா. ஆக தெற்கு என்பது எமதர்ம ராஜாவுக்கும், முன்னோர்களுக்கும் சொந்தமான திசை அதனால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பு இந்த கடிகாரத்தை அந்த இடத்தில மாட்ட கூடாது என்று சொல்லப்படுகிறது.

நமக்கு தினமும் நேரத்தை காட்டும் இந்த கடிகாரம் உடைந்தோ அல்லது விரிசலுடனோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் அன்றும் சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

நம்முடைய கால நேரத்தை குறிக்கும் இந்த கடிகாரம் நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டது தீர்மானிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. அதனால் இந்த கடிகாரத்தை எக்காரணம் கொண்டும் மெதுவாக ஓடவைக்க கூடாது. அதாவது கடிகாரம் எப்போது நேரத்தில் தான் இருக்க வேண்டும். அவற்றில் 5 நிமிடம் வேகமாக வைக்கலாமே தவிர. ஒருபோதும் குறைவாகவோ வைக்கக்கூடாது.

அதேபோல் ஓடாதா கடிகாரத்தை சுவற்றில் மாட்டியும் வைக்கக்கூடாது. உங்கள் வீட்டில் நிறைய கடிகாரம் இருந்தால் அதனை அங்கங்கே மாடியும் வைக்க கூடாது. அதிலும் குறிப்பாக நிலைவாசல்படிக்கு வெளியில் கடிகாரத்தை மாட்டி வைக்கக்கூடாது. சிலர் பால்கெணியில் கூட கடிகாரத்தை மாட்டி வைப்பார்கள் அது மிகவும் தவறான செயலாகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement