கண்டக சனி பரிகாரம்
சனிபகவானை கண்டு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு நீதிகாரகனான சனி பகவான், நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கஷ்டங்களை அளிப்பார். சனி பெயர்ச்சியில் ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி என பல சனி பெயர்ச்சிகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு சனியும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் கண்டக சனி இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்தால், சனியினால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கண்டக சனி என்பது, ராசியில் 7 ஆம் இடத்தில் கோச்சார சனி வந்தால் அதை கண்டக சனி என்று சொல்வார்கள். அதாவது, ராசியின் 7 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. இந்த கண்டக சனி ஏற்பட்டால் கழுத்தை நெறிக்கும் அளவிற்கும் கஷ்டங்கள் வந்து சேரும். எனவே, கண்டக சனியில் இருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
Kantaka Sani Pariharam in Tamil:
சிவன் கோவில்:
கண்டக சனி ஏற்பட்ட காலம் முதல் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்து வர வேண்டும். மேலும், ஒவ்வொரு சனிப்பிரதோஷம் தினத்தன்றும் நந்தி தேவர், சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
எள் தீபம்:
நவக்கிரகத்தில், சனிபகவானை வழிபாடு செய்ய வேண்டும். அதாவது, நவக்கிரகத்தில், சனிபகவானிற்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். சனி பகவானுக்கு உகந்த தீபம் எள் தீபம் ஆகும்.
காக்கைக்கு உணவளித்தல்:
தினமும் காக்கைக்கு உணவளித்தல் வேண்டும். அதாவது, சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் கருப்பு எள் கலந்து உருண்டையாக பிடித்து காக்கைக்கு உணவளித்து வர வேண்டும். அதன் பிறகு, நாய்க்கு உணவளிக்க வேண்டும்.
சூரிய பகவான் தரிசனம்:
கண்டக சனி ஏற்பட்ட காலம் முதல் முடியும் காலம் வரை தினந்தோறும், காலை எழுந்து குளித்துவிட்டு சூரிய பகவானை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, சூரிய பகவானை மனதில் நினைத்து மூன்று சொட்டு நல்லெண்ணெய்யை பூமியில் இட வேண்டும்.
மிளகு பயன்படுத்துதல்:
உணவில் அதிகம் மிளகை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக மூன்று கருப்பு மிளகை வாயில் போட்டு கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும்.
பிற பரிகாரங்கள்:
பெற்றோர்களை நன்கு கவனித்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.
வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாருங்கள்.
மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
அசைவம் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் தவிர்த்து விடுங்கள்.
சனிக்கிழமை தோறும் மலை 7 மணி அளவில், விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |