கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி.? | Kan Thirusti Remedies in Tamil

Advertisement

Kan Thirusti Remedies in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கண் திருஷ்டி என்பது இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விட்டாலோ அல்லது ஏக்கப்பார்வை பார்த்தாலோ ஏற்படும் திருஷ்டி ஆகும். இவ்வாறு பலபேரின் கண்களால் கொள்ளை பார்வை பார்ப்பதால் உடல் நிலை சரியில்லாமலோ அல்லது வேறு விதமான பிரச்சனைகளும் தொடர்ந்து ஏற்படும். ஆகையால், ஒருவருக்கு கண் திருஷ்டி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள், ஒவ்வொன்றிற்கும் பலவிதமான பாரம்பரிய முறைகளை விட்டு சென்றுள்ளார்கள். அதன்படியே நாமும் பின்பற்றி வருகிறோம். அவற்றில் ஓன்று தான் இந்த கண் திருஷ்டி. கண் திருஷ்டி ஏற்பட்டால் அவர்கள் பின்பற்றிய சில குறிப்புகளை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி.?

 kan drishti neenga valigal

தேவையான பொருட்கள்:

  •  கருப்பு கயிறு 
  • மிளகாய் 
  • படிகாரம் 
  • கடுகு 
  • கருப்பு வளையல் 
  • கல் உப்பு 
  • கற்பூரம் 

கடன் தீர எளிமையான பரிகாரம் 11 வாரம் செய்தால் போதும்..

கண் திருஷ்டி நீங்க பாட்டி வைத்தியம்:

படிகாரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதனை திருஷ்டி பட்டவர்களின் தலையை சுற்றி, அதாவது வலது புறம் மூன்று முறை, இடது புறம் மூன்று முறை சுற்றி நேருக்கு நேர் வைத்து மேலிருந்து கீழாக மூன்று வைத்து, அந்த படிகாரத்தை எடுத்து எரிகிற அடுப்பில்   போட வேண்டும்.

குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்க இதனை செய்யுங்கள். 5 கருப்பு வளையல்களை எடுத்து கொள்ளுங்கள். அதனை, குழந்தையின் தலை முதல் கால் வரை மூன்று முறை சுற்ற வேண்டும். அதாவது, வலது புறம் மூன்று முறை, இடது புறம் மூன்று முறைமாக சுற்றி அதனை கற்பூரம்  ஆராத்தியில் போட்டு அதில் உள்ள விபூதி வைத்து வெளியில் கொண்டு கொட்டி விட வேண்டும்.

கருப்பு கயிறை எடுத்து, ஆண்கள் வலது கை அல்லது காலிலும் பெண்கள் இடது கை அல்லது காலிலும் கட்டிவிட வேண்டும்.

கண் திருஷ்டி சுத்தி போடுவது எப்படி

வயதிற்கு வந்த பெண்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி நீங்க, ஆராத்தியை சடங்கான பெண்ணின் தலையை மூன்று முறை சுற்றி அப்பெண்ணின் தலைக்கு பின்னாலே உள்ள வர்களிடம கொடுத்து வெளியில் கொண்டு கொட்டி விட வேண்டும்.

 கண் திருஷ்டி விலக

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு சட்டியை வைத்து விடுங்கள். அதன் பிறகு, ஒரு சிறிய பாத்திரத்தில் பட்ட மிளகாய், கல் உப்பு மற்றும் கடுகு எடுத்து கொள்ளுங்கள். இதனை திருஷ்டி உள்ளவர்களின் தலையை சுற்றி, இதில் உள்ள கடுகு போல் திருஷ்டி அனைத்தும் வெடிக்க வேண்டும் என்று கூறி அடுப்பில் உள்ள இரும்பு சட்டியில் போட வேண்டும். போட்டதும் மிளகாய் கருகாமல் கடுகும் கல் உப்பும் வெடித்தால் திருஷ்டி கழிந்து விடும்.

சொந்தமாக நிலம் வைத்திருக்கிறீர்களா..? இதோ வீடு கட்ட எளிய பரிகாரம்

கண் திருஷ்டி பரிகாரம் செய்யும்போது கூற வேண்டியவை:

ஊரு கண்ணு , உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு , நோய் கண்ணு, நொள்ளக்கண்ணு, நல்லகண்ணு, கொள்ளிகண்ணு, கண்ட கண்ணு, முண்டகண்ணு , கரிச்சுக்கொட்டும் எல்லாக் கண்ணும் கண்டபடி தொலையட்டும், கடுகு போல வெடிக்கட்டும், நல்லதெல்லாம் நடக்கட்டும், நாடும் காடும் செழிக்கட்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement