ஜாதகத்தில் ராசி நட்சத்திரம் போன்று கரணமும் முக்கியமாம் ஏன் தெரியுமா..?

Types of Karanam in Tamil

கரணம் வகைகள் | Types of Karanam in Tamil

எந்த ஒரு நல்ல காரியத்திற்கோ, வீட்டில் திருமண நிகழ்வுக்கு நாம் முதலில் ஜாதகம் பார்ப்பது வழக்கமாக வைத்திருப்போம். ஒருவருடைய ஜாதகத்தில் நாம் எந்த அளவிற்கு ராசி, நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறமோ அந்த அளவிற்கு ஜாதகத்தில் கரணமும் முக்கியம் என்கிறார்கள். அப்படி கரணம் என்றால் என்ன, கரணம் எத்தனை வகையாக இருக்கிறது, எந்த வகையான கரணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று இன்றைய ஆன்மீக பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

கஜகேசரி யோகம் பலன்கள்

கரணம் என்றால் என்ன?

கரணம் என்பது சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியே ஒரு மாதம் கணக்கிடப்படுகிறது. இதனை தான் கரணம் என்று சொல்கிறார்கள். இந்த கரணம் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளில், அத்திதியின் அரைப் பகுதியாகும். இந்த கரணம் மொத்தம் 11 வகையாக இருக்கிறது.

இதில் முதல் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் என்பதாகும். அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். நீங்கள் எந்த கரணத்தில் பிறந்து இருக்குறீர்கள் என்பதை பிறந்த நேரத்தை வைத்தே அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான குண அதிசயங்கள் இருக்கிறது வாங்க அவற்றை கீழே தெளிவாக காண்போம்..

சகுனி கரணம்:

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் திறமைசாலியாகவும், அறிவுத்திறன் அதிகம் உள்ளவர்களாவும் இருப்பார்கள். இந்த கரணத்திற்கான உருவம் காக்கை.

சதுஷ்பதக் கரணம்:

இந்த சதுஷ்பதக் கரணத்தில் பிறந்தவர்கள் சுதந்திர தன்மை அதிகம் கொண்டவராய் இருப்பார்கள். மற்றவர்களிடம் பணிந்து வேலை பார்க்காமல் தானே முதலாளி என்ற எண்ணத்துடன் சொந்தமாக தொழில் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். கடின உழைப்புடன் இருக்கக்கூடியவர்களாக திகழ்வார்கள்.

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். இந்த கரணத்திற்கான உருவம் நாய்.

நாக கரணம்:

நாக கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நில சம்மந்தமான சுரங்க பகுதி, தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மிகவும் நல்ல குணத்தினை கொண்டவர்களாக இருப்பார்கள். நாக கரணத்தில் பிறந்த காரணத்தால் இவர்களில் ஒரு சிலருக்கு விஷப் பாம்புகளை மயக்கி பிடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். இந்த கரணத்திற்கான உருவம் நாகப்பாம்பு.

மரண யோகம் என்றால் என்ன?

கௌஸ்துவ கரணம்:

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த கரணத்தில் பிறந்த ஒரு சில பேர் மற்றவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுத்தக்கூடியவர்களாகவும், இரக்கமற்ற குணத்தினை கொண்டவர்களாவும் இருப்பார்கள். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தைரியமாக செய்யலாம்.

பவ கரணம்:

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எந்த பொருளுக்கும் அதிகமாக ஆசைப்படாமல் கிடைத்ததை வைத்து வாழ்க்கையை இனிமையாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த கரணத்திற்கான உருவ விலங்காக சிங்கம் இருப்பதால் சாகசம் புரியும் ராணுவத்துறை, காவல்துறை போன்ற பணிகளில் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

பாலவ கரணம்:

அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள் இந்த பாலவ கரணத்தில் பிறந்தவர்கள். எந்த ஒரு காரியத்தையும் தைரியத்துடன் தொடங்கி அந்த செயலில் வெற்றி பெறுவார்கள். குறிப்பாக மற்றவர்களுக்காக எந்த தியாகத்தையும் துணிந்து செய்யக்கூடியவர்கள் இவர்கள். விளையாட்டில் அதிகமாக ஆர்வம் கொண்ட இவர்கள் விளையாட்டு துறையில் சாதனை புரிவார்கள். இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்கான உரிய விலங்காக இருப்பது புலி.

கிம்ஸ்துக்னம் கரணம்:

இந்த கிம்ஸ்துக்னம் கரணத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு அதிகமாக தீங்கு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் சிறந்த அறிவுத்திறனை கொண்டிருப்பார்கள். தீயவர்களுன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்து, அவர்கள் சொற்படி நடந்தால் யோகம் இவர்களுக்கு உண்டு. இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்கான உரிய விலங்காக இருப்பது புழு.

தைதுலைக் கரணம்:

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் எப்போதும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள். இயற்கையிலேயே இவர்கள் மனவுறுதி அதிகம் கொண்டவர்களாக இருப்பதால், எந்த சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவார்கள். பொதுவாக எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்கான உரிய விலங்காக இருப்பது கழுதை.

கரஜைக் கரணம்:

இந்த கரஜை கரணத்தில் பிறந்த நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து திட்டமிட்டு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகம் இருப்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற கலை சம்பந்தமான துறைகளில் சாதித்து காட்டுவார்கள். இவர்களுக்கு சற்று சலன புத்தி இருப்பதால், பெண்கள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த கரணத்திற்கான உருவம் யானை.

வனிஜக் கரணம்:

இந்த கரணத்தில் பிறந்தவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். மேலும் இவர்களுக்கு வியாபாரதில் சாதிக்கக்கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்துவிடுவார்கள். தங்களுக்கு வேண்டிய காரியங்களை மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள். இக்கரணத்திற்கான விலங்கு உருவம் எருது.

பத்ரைக் கரணம்:

இவர்களும் இங்கு கூறப்பட்ட சில கரணத்தவர்களைப் போல் தீயச் செயல்களைப் புரிவர்களாக இருப்பர். இவர்களுக்கு சற்று மந்தக் குணம் இருப்பதால் எந்த காரியத்தையும் முடிப்பதற்கு சற்று தாமதம் செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாராவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால் இவர்களும் வெற்றியாளர்களாகலாம். இக்கரணத்திற்கான பறவையின் உருவம் கோழி.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்