காலில் மச்சம் இருந்தால் என்ன பலன் | Kaal Macha Palangal in Tamil

Kaal Macha Palangal in Tamil

காலில் மச்சம் இருந்தால் | Foot Mole Astrology in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் காலில் வரும் மச்சத்திற்கான பலன்களை தெரிந்து கொள்வோம். தோலில் மெலனோசைட் எனப்படும் நிற செல்கள் அதிகமாக சுரந்து ஒன்றாக சேர்ந்து வருவதால் ஏற்படுவதுதான் மச்சங்கள். இது உடம்பில் எங்கு வேணாலும் வரும். மச்சம் எந்த இடத்தில் வருகிறதோ அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் இந்த பதிவில் காலில் எந்த இடத்தில் மச்சம் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கால் மச்சம் பலன்கள்:

 • Kaal Macha Palangal in Tamil: பாதத்தின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுபவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
 • மேலும் இந்த மச்சம் உடையவர்கள் கலைத்துறையான சினிமா, நாடக துறையில் கொடிகட்டி பறப்பார்கள். இசைத்துறையிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

குதிகால் மேற்புறத்தில் மச்சம் இருந்தால்:

 • கால் மச்சம் பலன்கள்: குதிகாலில் மேற்புறத்தில் அல்லது அடிப்பகுதியில் மச்சம் இருந்தால் இவர்கள் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
 • ஒரு சிலருக்கு இந்த வெளிப்பயணம் மேற்கொள்வதன் மூலம் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கூட கிடைக்கலாம். மேலும் இவர்களுக்கு செல்வ வசதி, வாகன வசதி போன்றவை ஏற்படும்.

கால் விரலில் மச்சம் பலன்கள்:

 • Kaal Viral Macham: இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். யாரிடமும் அதிகம் பழக்கம் வைத்து கொள்ளமாட்டார்கள். எல்லாம் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • இவர்களுக்கு மிகுதியான பொறாமை குணம் இருப்பதால் வாழ்வில் நிறைய தோல்விகளை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

கால் கட்டை விரலில் மச்சம்:

 • Kaal Macha Palangal in Tamil: கட்டவிரலுக்கு கீழ் பகுதியில் மச்சம் இருக்கும் நபர்கள் எதிலும் சிறந்து விளங்குபவர்களாக இருப்பவர்கள். மற்றவர்கள் இவரின் மீது அன்பு வைத்திருப்பார்கள். உதவிகள் இவரை தேடி வரும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.

வலது பாத மச்சம்:

 • கால்களில் மச்சம்: இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் நல்ல நோக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிமையான வாழ்க்கையையும் ஆனந்தமாக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
 • எல்லோரையும் எளிதில் நம்பக்கூடியவராகவும், தீமை செய்தவர்களுக்கு நன்மையையே செய்யகூடியவர்களாக இருப்பார்கள்.

வலது பாதத்தில் வலது பக்கம் மச்சம்:

 • கால் மச்சம் பலன்கள்: இவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். நேர்மையாகவும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
 • மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் படைத்தவர்களாகவும், தமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கும் எண்ணம் உடையவர்களாவும் இருப்பார்கள். எந்த ஒரு வேலையையும் முழு முயற்சியுடன் செய்து வெற்றி காண்பார்கள்.
பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..!

வலது பாதத்தில் இடது பக்கம் மச்சம்:

 • Kaal Macha Palangal in Tamil: இவர்கள் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இறையாண்மை உள்ளவராகவும், பொறுப்பானவராகவும் இருப்பார்கள்.
 • இவர்களின் வளர்ச்சியை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை ஓய்வு எடுக்கமாட்டார்கள்.

இடது பாத மச்சம்:

 • Foot Mole Astrology in Tamil: இந்த பாதத்தில் மச்சம் உள்ளவர்கள் அடிக்கடி பயணம் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை சந்திப்பார்கள்.

இடது பாதத்தில் வலது பக்கம் மச்சம்:

 • கால் மச்சம் பலன்கள்: இவர்களின் வாழ்க்கை துன்பம், இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும். ஒரு சிலர் மதுப்பிரியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை வெறுப்பார்கள், முகம் எப்பொழுதும் வாடி சோகமாகவே இருக்கும்.

இடது பாதத்தில் இடது பக்கம் மச்சம்:

 • Foot Mole Astrology in Tamil: இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்கள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாரிக்க கூடியவர்களாக இருப்பார்கள். நீண்ட ஆயுள் வாழமாட்டார்கள்.

வலது தொடையில் மச்சம் பலன்கள்:

 • கால் மச்சம் பலன்கள்: இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பார்ப்பார்கள். இவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களைக் கண்டறியும் சக்தி படைத்தவர்கள். இவர்களை யாருமே ஏமாற்ற முடியாது. கல்வியில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கான மச்ச பலன்கள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்