வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கணவன் நீண்ட ஆயுளை பெற எந்த விரலால் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா..?

Updated On: May 9, 2024 6:21 PM
Follow Us:
Kungumam Entha Viralil Vaikka Vendum
---Advertisement---
Advertisement

Kungumam Entha Viralil Vaikka Vendum

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவின் வாயிலாக பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் கூறப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே குங்குமம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக இந்து சமயத்தில் குங்குமம் ஒரு புனிதமான பொருளாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குங்குமம் ஒரு மங்களகரமான சக்தி வாய்ந்த பொருளாக இருக்கிறது. அதுபோல குங்குமம் பெண்களுக்கு ஓர் புனிதமான பொருள் என்றே சொல்லலாம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக கணவனின் ஆயுள் அதிகரிக்க பெண்கள் குங்குமத்தை எந்த விரலால் வைக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

குங்குமம் தயாரிப்பது எப்படி

திருமணமான பெண்கள் குங்குமத்தை எந்த விரலால் வைக்க வேண்டும்: 

பொதுவாக திருமணமான பெண்கள் குங்குமத்தை தினமும் வைத்து கொள்வது வழக்கமாகும். இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தருகிறது. அதுபோல அந்த காலத்தில் இருந்து இன்று வரை கடைப்பிடித்து வரும் பாரம்பரியமான பழக்கங்களில் இதுவும் ஓன்று.

அதுபோல பெண்கள் குங்குமம் வைப்பது ஆன்மீகத்திற்கு மட்டும் இல்லை. இதன் பின் நமது முன்னோர்கள் திருமணமான பெண்கள் குங்குமம் அணிவதன் பின்னால் பல்வேறு மத சாஸ்திரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல், குங்குமம் வைப்பது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ, அதேபோல எந்த விரலால் குங்குமம் வைக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது. ஆகையால் பெண்கள் எந்த விரலால் குங்குமம் வைக்க வேண்டும் என்று தற்போது காணலாம்.

குங்குமம் வைப்பதன் நன்மைகள்

பொதுவாக திருமணமான பெண்கள் எப்பொழுதும் இந்த மூன்று இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது திருமணமான பெண்கள் குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு போன்ற இடங்களில் எப்பொழுதுமே குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். இது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இதனால் கணவனுக்கு நீண்ட ஆயுளும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எனவே திருமணமான பெண்கள் குங்குமம் வைக்கும் போது மோதிர விரலால் மட்டும் தான் வைக்க வேண்டும். 

குங்குமம் கீழே கொட்டினால் நல்லதா.. கெட்டதா.. தெரிந்துகொள்ளுங்கள்

காரணம் மோதிர விரலானது சூரியக் பகவானுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே நாம் மோதிர விரலால் குங்குமம் வைக்கும் போது மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமில்லாமல், திருமணமான பெண்கள் பார்வதி தேவியை மனதில் நினைத்து ஆசீர்வாதம் பெற்று நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதன் மூலம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

அதுபோல வாரத்தில் ஒரு முறையாவது பெண்கள் கணவன் கையால் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் கணவன் மனைவிக்கு இடையில் உறவு பலப்படும்.

குறிப்பாக குங்குமம் வைக்கும் போது கீழே சிந்தினாள் அதை மீண்டும் எடுத்து நெற்றியில் வைக்க கூடாது. அப்படி வைத்தால், கணவனின் ஆயுள் குறையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now