குரு பார்க்கும் இடம் | Guru Parkum Idam

Advertisement

குரு பார்வை என்ன செய்யும்..?

கற்றல், கற்றுக் கொடுத்தல் ஆகிய இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

குரு பார்க்கும் இடம் பலன்கள்:

ஒன்றாம் இடம்:

1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும்.

இரண்டாம் இடம்:

2-ம் இடத்தை, குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

மூன்றாம் இடம்;

3-ம் இடத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், எதிரிகளின் தொல்லை விலகும்.

நான்காம் இடம்:

4-ம் இடத்தை, சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு- மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.

ஐந்தாம் இடம்:

5-ம் இடத்தை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்குக் குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.

ஆறாம் இடம்:

6-ம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.

ஏழாம் இடம்:

7-ம் இடத்தை, களத்திர ஸ்தானத்தை குரு பார்க்க, பெற்றோர் ஆசிகளுடன் நல்ல மணவாழ்க்கை அமையும்.

எட்டாம் இடம்:

8-ம் இடத்தை, ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்; விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.

ஒன்பதாம் இடம்:

9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

பத்தாம் இடம்:

10-ம் இடத்தை, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.

பதினொன்றாம் இடம்:

11-ம் இடத்தை, லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.

பன்னிரெண்டாம் இடம்:

12-ம் இடத்தில், சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். தெய்வ தரிசனமும் மகான்களின் அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

ஏப்ரல் 14ம் தேதி குருபெயர்ச்சி | குரு பெயர்ச்சி பலன்கள் 2022
குரு பெயர்ச்சி 2022 to 2023 எப்போது வருகிறது?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement