குரு பெயர்ச்சி 2023 | Guru Peyarchi 2023 Tamil
ஜோதிட சாஸ்திரம் படி கிரங்கள் மாற்றம் ஏற்படும். ராசிக்கு மாறுவதோடு மட்டுமில்லாமல் நட்சத்திரத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடம் மீன ராசியில் பயணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரம் புதன் ஆளும் நட்சத்திரம் ஆகும். இதற்குள் குரு சென்றிருப்பதால் மற்ற அனைத்து ராசிகளிலும் தாக்கம் காணப்படும். இந்த குருவின் பார்வையானது அதிகமாக 3 ராசிகளில் காணப்படுகிறது. இந்த 12 ராசியில் எந்த ராசிக்கு குருவின் பார்வையால் அமோக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்:

குருவின் மாற்றத்தால் இந்த மிதுன ராசிக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். முக்கியமாக சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கும். சொத்து நிலம் என்று வாங்க நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் பணி புரிபவர்களுக்கு பதிவு உயர்வுக்கும் வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் லாபத்தை பெறுவதற்கு ஒப்பந்தம் கிடைக்கும்.
மிதுன ராசி என்ன தொழில் செய்யலாம்? எந்த தொழில் செய்யக்கூடாது?
ரிஷப ராசி குரு திசை பலன்கள்:

குருவின் மாற்றம் ரிஷப ராசிக்கு நிதி சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த ராசிக்காரர்களை தேடி தான் பணம் வரும். ஷேர் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த குருவின் மாற்றத்தால் இந்த காலத்தில் இழந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஒத்துழைப்பால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனை பெறுவீர்கள். பழைய முதலீடுகளின் மூலம் இப்போது நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்:

அடுத்து அதிர்ஷ்டத்தை அளிக்க போவது மேஷ ராசிக்கு தான். முக்கியமாக வெளி நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். மேலும் வெளியில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அதேபோல் வீடு இடம் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தில் மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மார்ச் மாதம் இந்த ராசிக்காரர் தான் தொழில் ரீதியாக அசுர வளர்ச்சி அடைய போகிறார்கள்..! அது எந்த ராசி தெரியுமா..?
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













