வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குரு மங்கள யோகம் | Guru Mangala Yogam

Updated On: February 27, 2023 12:58 PM
Follow Us:
Guru Mangala Yogam in Tamil
---Advertisement---
Advertisement

குரு மங்கள யோகம் விளக்கம் | Guru Mangala Yogam in Tamil

Guru Mangala Yogam: குரு பகவான் நவ கிரகங்களிலும் பொன்னானவன் என்று போற்றப்படுகிறவர். குருவின் பார்வை நம் ராசியை பார்க்கும் போது அல்லது ஜாதக கட்டத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து நமக்கு அற்புத பலன்களையும், யோகங்களையும் அள்ளி தரக்கூடியவர். அப்படி பல நன்மைகளை தரக்கூடிய யோகங்களில் ஒன்று தான் குரு மங்கள யோகம். இந்த யோகம் கிடைத்தால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இன்றைய ஆன்மிக பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குரு மங்கள யோகம் என்றால் என்ன?

  • குரு செவ்வாயுடன் இணையும் போது மங்கள யோகம் கிடைக்கும். மங்களம் என்ற சொல்லிற்கு செவ்வாய் என்று பொருள்.
  • செவ்வாயும், குருவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலோ அல்லது ஒரே இடத்தில் இருந்தாலோ கிடைப்பது மங்கள யோகம்.
  • எந்த ராசியில் குருவுடன் செவ்வாய் சேருகிறாரோ அவருக்கு அற்புதமான பல நன்மைகளை அந்த ராசிக்காரர் பெறுவார்கள்.

Guru Mangala Yogam:

  • செவ்வாய் கிரகம் அல்லது குரு கிரகங்களில் ஏதேனும் ஒன்றில் உச்ச நிலையில்  அல்லது ஆட்சி வீடுகளில் இருந்தால் சுப யோகங்கள் கிடைக்கும்.
  • பகை அல்லது நீச்ச வீடுகளில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்காமல் மிதமான பலன்களே கிடைக்கும்.
  • குரு மங்கள யோகம் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு நன்மைகளை செய்யும்.

குரு மங்கள யோகம் பலன்கள்:

  • இந்த யோகம் ஒரு ராசிக்கு கிடைப்பதால் உயர் அதிகாரிகளின் நட்பு, ஆதரவு கிடைக்கும்.
  • சமூகத்தில் புகழ், மதிப்பு, அந்தஸ்து உயரும்.
  • வேறு ஏதேனும் தோஷங்கள் ராசியில் இருந்தால் அந்த தோஷத்தால் ஏற்படும் தீமைகளை குறைக்கும்.

Guru Mangala Yogam:

  • குரு திசை நடைபெறும் போது குரு மங்கள யோகம் அந்த ராசிக்காரர்களுக்கு மேலும் பல நன்மைகளை கொடுக்கும்.
  • தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், தைரியம், வலிமை, ஆற்றல் அனைத்தையும் கொடுக்கும். வீடு, இடம், வாகனம், செல்வம் ஆகியவை நிறைந்து காணப்படும். இது போன்ற அற்புத பலன்களை குரு மங்கள யோகம் கொடுக்கும்.

யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் 

சந்திர யோகம்:

1, 5, 9 ஆகிய இடங்களில் குரு காணப்பட்டால் அந்த யோகம் குரு சந்திர யோகம் எனப்படும். இந்த யோகம் உள்ளவர்களுக்கு புகழ் மற்றும் பொருளாதார நிலை உயரும்.

கஜகேசரி யோகம்:

4, 7, 10 ஆகிய  இடங்களில் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அந்த யோகம் கஜகேசரி யோகம் ஆகும். இந்த யோகம் உள்ள ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம், பதவி உயர்வு கிடைக்கும்.

ஹம்ச யோகம்:

கேந்திரத்தில் சந்திரனுக்கு குரு உச்சம் அடையும் போது ஹம்ச யோகம் கிடைக்கும். இந்த யோகம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

சகட யோகம்:

6, 8, 12 ஆகிய இடங்களில் குருவுக்கு சந்திரன் இருந்தால் சகட யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகத்தினருக்கு நன்மையும், தீமையும் கலந்து காணப்படும். கையிருப்பு குறையும் போது மட்டுமே மற்றொரு தொகை வந்து சேரும்.

சித்த யோகம் என்றால் என்ன?
மரண யோகம் என்றால் என்ன?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now