2021-ம் ஆண்டிற்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்

Advertisement

குரு பெயர்ச்சி பலன்கள்

கிரக பெயர்ச்சி பெறுவதில் மிக முக்கியமான பெயர்ச்சி என்பது குருபெயர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக குருபகவான் ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு என்பது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆகவே செப்டம்பர் 14 2021, காலை 02.22 மணி அளவில் கும்பத்தில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகி வக்ர நிவர்த்தி அடைகிறார். அவ்வகையில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறார்? என்பதை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

குரு பெயர்ச்சி 2022 எப்போது வருகிறது?
வக்ர சனி பெயர்ச்சி 2021

குரு வக்ர பெயரச்சி 2021 | Guru Vakra Peyarchi 2021

குரு வக்ர பெயர்ச்சி 2021 ரிஷபம்:

Risabam

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி சிறந்த பலன்களை வழங்க இருக்கிறது. இதற்கு காரணம் குரு ரிஷப ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்திருப்பது அதிர்ஷ்ட குரு, பாக்கிய குரு என்பார்கள். இதனால் சுப காரியங்கள் கை கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைத்து கூடிய சீக்கிரம் திருமணமும் நடைபெறும். இதுவரை இருந்த வந்த இடையூறுகள், மன கவலை, பிரச்சனைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வியாபாரம்  ரீதியாக சாதகப் பலன்கள் கிடைக்கும். மேலும் ரிஷபம் ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரபடுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டு. எந்த ஒரு முடிவையும் நிதானத்துடன் எடுப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். இருப்பினும் ஆரோக்கியம் பலம் பெற உணவு ரீதியான விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை, காளி போன்ற உக்கிர தெய்வம் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

குரு வக்ர பெயர்ச்சி 2021 கடகம்:

Kadagam

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி சிறந்த பலன்களை அளிக்கும். கடக ராசிக்கு 7-ம் இடமான மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பது மிக சிறப்பானதாக இருக்கும். தங்கள் உடலில் இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியா சரியாக ஆரம்பிக்கும். உங்கள் தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் அனைத்தும் சரியாகும். குரு பார்வை உங்கள் ராசியில் 7-ம் இடத்தில் இருப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் மறைந்து நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் பெருகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும், ஒத்துழைப்பும் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பும், அந்நியோன்னியம் அதிகரிக்கும். இருப்பினும் சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்துவர நன்மைகள் நடக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள்

குரு வக்ர பெயர்ச்சி 2021 கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கும். குருபகவான் கன்னி ராசிக்கு 5-ம் இடம் என்பதால். பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு திரும்புவதால் உங்களுக்கு சொத்துக்கள் வாங்கவும், சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும். தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் செய்த முதலீடுகளிலிருந்து இப்பொழுது லாபத்தை எதிர்பார்க்கலாம். இதுவரை சாதகமற்ற நிலையில் இருந்த உங்கள் தொழில், வியாபாரம், வேலை அனைத்தும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும். தடைப்பட்ட கட்டுமான பணிகளை மீண்டும் எடுத்து வெற்றியாக கட்டி முடிப்பீர்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.

குரு வக்ர பெயர்ச்சி 2021 மீனம்:

மீனம் ராசிக்காரர்களுக்கும் இந்த குரு பகவானின் வக்ர பெயர்ச்சி நன்றாக இருக்கும். குரு பகவானின் மீன ராசிக்குள் 11-ம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆகவே மீனம் ராசிக்காரர்களுக்கு பலவகையில் ராஜ யோக பலனைத் தரக்கூடியதாக இந்த குரு வக்ர பெயர்ச்சி இருக்கும். உடல் ரீதியாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக சரியாகும். அதுவரை உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில்/ வியாபாரம் சிறந்து விலகும். குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கி நிம்மதி ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன் பெற போகிறீர்கள். இருப்பினும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்கள், பண ரீதியான விஷயங்களில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

பரிகாரம்: திங்கட் கிழமையில் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சனி பெயர்ச்சி 2020 – 2023 | சனி பெயர்ச்சி பலன்கள் 2021

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement