குலதெய்வம் மந்திரம் | Kuladeivam Manthiram in Tamil
நமக்கு இருக்கும் இன்னல்கள், துன்பங்கள், தடைகள் என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை சரி செய்து நம் வாழ்க்கையை வரமாக மாற்றும் சக்தி குலதெய்வத்திற்கு உண்டு. இதனால் தான், நாம் எந்த தெய்வத்தை வணங்குவதற்கு முன்னால் முதலில் நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை தான் வழிபட வேண்டும்.
குலதெய்வம் என்பது, நம் குடும்பத்தில் 64 தலைமுறைக்கு முன்பாக வாழ்ந்தவர்களின் ஒட்டுமொத்த ஆத்மாக்களும் குலதெய்வ ரூபத்தில் இருந்து வழிவழியாக நம் குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்கள். இப்படி நம்மை பாதுகாத்து வரும் குலதெய்வத்தினை நாம் தினமும் வழிப்பட வேண்டியது அவசியம். எனவே, இப்பதிவில் குலதெய்வத்தின் அருளை பெற தினமும் உச்சரிக்கவேண்டிய குலதெய்வ மந்திரம் பற்றி பார்க்கலாம் வாங்க.
Kuladeivam Manthiram in Tamil:
ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா
இந்த மந்திரத்தை தினமும் பிரம்மமுகூர்தத்தில் மூன்று முறை கூறி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
எப்படி வணங்க வேண்டும்.?
ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் ஒரு பெயர் இருக்கும். அந்த பெயரினை உச்சரித்து, உதாரணமாக, உங்கள் குலதெய்வம் முருகப்பெருமானாக இருந்தால் ‘ஓம் முருகப்பெருமானே நம’ என்று கூறி மேற்கூறியுள்ள மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும். இதேபோல், உங்கள் குலதெய்வத்திற்கு ஏற்ற பெயரினை கூறி “ரோகாச்” என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த 3 பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்..
குலதெய்வம் மந்திரத்தின் பொருள்:
பிணி, துக்கம், வறுமை, துன்பங்கள், பலவீனம், மனநோய், போன்றவை என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் என் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன் என்பது இதன் பொருளாகும்.
வாழ்க்கையில் துன்பங்கள் நீக்கி இன்பங்கள் பெருகிட தினமும் குலதெய்வம் மந்திரத்தை உச்சரித்து குலதெய்வத்தை வழிபடுங்கள்.
குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |