குலதெய்வம் வழிபடும் முறை
நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் இந்த யோசனை அனைவருக்கும் எழுந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சிலர் கோவில்களுக்கு செல்வார்கள் சிலர் கோவிகளுக்கு போகாமல் இருப்பார்கள். சிலர் சில நாட்களில் மட்டுமே கோயிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் குலதெய்வ கோவில்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஏன் கோவில்களுக்கு செல்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா..? கோவில் என்றால் மனதிற்கு ஒரு அமைதி இருக்கும் அதேபோல் நம்முடைய கஷ்டங்கள் குறைந்தது போல் உணர்வுகள் உண்டாகும் என்பதற்காக கோவில்களுக்கு செல்வார்கள்..!
எப்போது குலதெய்வம் நியாபகம் வரும்:
அனைவருமே கோவில்களுக்கு செல்வார்கள். ஆனால் அதிகளவு குலதெய்வ கோவிலுக்கு செல்லமாட்டார்கள். மற்ற கோவில்களுக்கு செல்வார்கள். வெள்ளி செவ்வாய் கிழமைகளின் கோவில்களுக்கு போகாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு தெய்வத்துடைய பக்தி உள்ளது.
சிலருக்கு தெய்வம் பற்றி நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் திடீரென்று குலதெய்வத்துடைய ஞாபகம் வரும். சிலர்க்கு குலதெய்வம் எங்கு உள்ளது என்பதே தெரியாது அவர்களுக்கு குலதெய்வம் பற்றிய யோசனை வரும். இதற்கு என்ன காரணம். அதையும் இப்போது தெரிந்துகொள்வோம்..!
அதேபோல் ஒருவருக்கு குலதெய்வத்தை பற்றி ஞாபகம் வருகிறது என்றால் அது நல்ல சகுனமே ஆகும். ஒருவருக்கு குலதெய்வத்தை பற்றிய ஞாபகம் வரவில்லை என்றால் அவன் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் கெட்ட சகுனம், கெட்ட சக்தி அவர்களை குலதெய்வத்தை பற்றிய யோசனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..!
அப்படி இருக்கும் போது அதனையும் மீறி நமக்கு என்றாவது ஒரு நாள் திடீரென்று குலதெய்வம் பற்றி யோசனை வந்தால் அந்த நேரம் உங்களுக்கு நல்ல நேரம் ஆகும்.
அதேபோல் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது அதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் தினமும் ஒருமுறையாவது குலதெய்வத்துடைய பெயரை உச்சரிக்க வேண்டும்.
குலதெய்வம் வழிபடும் முறை:
பொதுவாக வீட்டில் உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் அப்படி இருக்கும் போது கணவன் மனைவி இருவருக்கும் தோன்றுவது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் அது திடீரென்று தோன்றும் அதேபோல் அவர்கள் கோவில்களுக்கு விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்கி கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வந்து விட்டது என்றால் அது நல்ல சகுனம். அதேபோல் வேறு ஏதேனும் பொருட்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்வோம் என்று தோன்றினாலும் நல்லது தான்.
யோசனை தோன்றுவதை விட அந்த பொருட்கள் அனைத்தையுமே வாங்கி கொடுத்துவிட்டிர்கள் என்றால் அந்த நாளிலிருந்து உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விடும். இது போன்ற சின்ன பரிகாரத்தை கடைப்பித்தாலே போதும் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கும்.
இன்னொரு விஷயம் முக்கியமானதாக சொல்லப்போனால் உங்களுடைய குலதெய்வம் மிகவும் தூரமாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் அதேபோல் ஊர் எல்லைகளில் இருக்கும் அவ்வளவு ஏன் பெரிய பெரிய கோவிலாக கூட இருக்கும். உங்கள் குலதெய்வம் என்பது உங்களுக்கு மட்டும் சொந்தம் என்றும் சொல்ல முடியாது, உங்களுடைய குலதெய்வமானது, மற்றவர்களுக்கும் குலதெய்வகமாக இருக்கும்.
ஆகையால் தெய்வத்தை வழிபட வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.
வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உணவுகள் அல்லது நீர் மோர் போன்றவற்றை தானமாக கொடுத்தால் உங்களுக்கு நன்மை ஆகும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |