கைரேகை பலன்கள் பார்ப்பது எப்படி, அதற்கான பலன்கள்

Advertisement

கைரேகை பலன்கள் பார்ப்பது எப்படி | Kairegai Jothidam | Kairegai Jothidam in Tamil

Kairegai Jothidam Palangal in Tamil: பொதுநலம் அன்பர்களே..! இன்றைய பதிவில் கைரேகை பலன்களை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இப்போதெல்லாம் கைரேகை ஜோதிடமானது குறைந்துக்கொண்டே வருவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. முந்தைய காலத்தில் கைநாடி, கை ரேகையை வைத்தே நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணித்து விடுவார்கள் ஜோதிடர்கள்.

ஆனால் இப்போதெல்லாம் பணத்திற்காக எதையாவது கூறி விடுகிறார்கள். நம்முடைய கைரேகையில் பல விதமான ரேகைகள் தென்படும். மெல்லிய ரேகை, அடர்த்தியான ரேகை, நீளமான ரேகை, குட்டையான ரேகை என்று வெவ்வேறு வகைகளில் ரேகைகள் காணப்பட்டாலும் கையில் நான்கு ரேகைகள் மட்டும் பளிச்சென தெரியும்படி இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு மூன்று ரேகைகள் தான் பளிச்சென்று இருக்கும். அவை எதை பற்றி குறிக்கிறது? அதை வைத்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்? என்பதை மேலோட்டமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கைரேகை பார்ப்பது எப்படி.?

ஒருவரின் கைரேகையை கணித்து அவரது எதிர்காலம், குணம். பணம், வேலை, குடும்பம் போன்ற விவரங்களை கணிப்பார்கள்.

ஒருவரின் இடது கைகளில் உள்ள கொடுக்கல் மற்றும் மேடுகளை வைத்து கணிப்பார்கள். இதனை இதற்கென்று படித்த ஜோதிடர்கள் இருப்பார்கள். இவர்களை கைரேகை ஜோதிடர்கள், குறிசொல்பவர்கள், கைரேகை படிப்பவர்கள் என்றெல்லாம் அழைக்கலாம்.  ஒவ்வொரு ரேகைகைக்கான பலன்களை கீழே விரிவாக கொடுத்துள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

திருமண ரேகை பலன்கள்

ஆயுள் ரேகை பலன்:

Kairegai Jothidam Palangal in Tamil

ஆயுள் ரேகையானது மணிக்கட்டு பகுதியிலிருந்து கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து இருக்கும். இந்த ரேகையைத்தான்  நாம் ஆயுள் ரேகை என்று சொல்கிறோம். ஒருவருக்கு ஆயுள் ரேகை அமைந்திருக்கும் நீள அளவு, அடர்த்தி போன்றவற்றை வைத்து ஒருவருடைய உடல் நலம், அவருடைய வாழ்நாள், எதிர்காலம் போன்றவற்றை இந்த ரேகையை வைத்தே தெரிந்து கொள்ளலாம். மணிக்கட்டு வரை நீண்டு காணப்பட்டால் அவருடைய ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். நீள வாக்கில் இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து ரேகை இருந்தால்  உடலில் ஆரோக்கிய சம்பந்த பிரச்சனைகள் அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும்.

இதய ரேகை பலன்:

Kairegai Jothidam in Tamil

இதய ரேகை சுண்டு விரல் பகுதியிலிருந்து கீழே ஆரம்பித்து ஆள்காட்டி விரலை நோக்கி நீளமாக செல்லும். இந்த ரேகையை தான் இதய ரேகை என்று அழைப்பார்கள். இந்த ரேகையானது பலருக்கும் ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலுக்கு இடையில் பள்ளத்தில் சென்றுவிடும்.

இது போன்று இல்லாமல் ஆள்காட்டி விரலுக்கு மேலே சென்றால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். ரேகை பள்ளத்தை நோக்கி செல்லாமல் மேட்டு பகுதியை நோக்கி இருந்தால் எதிலும் புத்திசாலிகளாக இருப்பார்கள். ரேகை பள்ளத்தை நோக்கி செல்பவர்களுக்கு எப்போதும் எந்த காரியத்திலும் பொறுமை குணம் என்ற ஒன்று அறவே இருக்காது. அவர்கள் அனைத்து செயலிலும் அவசரப்பட்டு செயலை முடிப்பார்கள்.

புத்தி ரேகை பலன்:

Kairegai Josiyam in Tamil

புத்தி ரேகையானது ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து இதய ரேகைக்கு நடுவில் செல்லும் ரேகையை தான் புத்தி ரேகை என்பார்கள். இந்த புத்தி ரேகை மணிக்கட்டு பகுதியிலிருந்து அப்படியே திரும்பி சென்றால் எந்த ஒரு காரியத்திற்கும் உடனே உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள்.

மணிக்கட்டை நோக்கி ரேகை திரும்பாமல், சுக்கிர மேட்டை நோக்கினால் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை எளிமையாக  புரிந்து கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும். ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் ஒன்றாக இருப்பவர்களை விட தனித்தனியே பிரிந்து காணப்பட்டால் அவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்

விதி ரேகை பலன்:

 kairegai palangal tamil

மேல் கூறிய இந்த மூன்று ரேகைகளும் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும். நான்காவதாக விதி ரேகையானது பளிச்சென்று இருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் இருக்காது. சிலரது கைகளில் மட்டும்தான் இருக்கும். இந்த விதி ரேகை மணிக்கட்டிலிருந்து இதய ரேகைக்கும், புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்வது போன்று இருக்கும். இந்த ரேகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக  இருக்கும்.

இந்த விதி ரேகை செல்வ செழிப்பையும், வசதி வாய்ப்புகளையும் குறிக்கும். கையில் இந்த விதி ரேகையானது எந்த அளவிற்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை வசதி வாய்ப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ரேகையே கையில் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

இதய ரேகை, ஆயுள் ரேகை, புத்தி ரேகை, விதி ரேகை இந்த நான்கு ரேகைகளும் சாதாரணமாக அனைவருக்கும் கையில் பளிச்சென்று தெரியும். இவை நான்கும் கைரேகை சாஸ்திரத்தில் முக்கியமான ரேகைகளாக பார்க்கப்படுகிறது. இதய  ரேகைக்கும், சுண்டு விரலுக்கும் இடையில் சிறிய அளவில் செல்லும் ரேகையை  காதல் ரேகை என்று சொல்லுவார்கள்.

இவை வாழ்க்கையில் காதலில் அவர்கள் கொண்ட ஆழமான உணர்வை எடுத்துரைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ரேகைகள் இருந்தால் ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் வாய்க்கும் என்பார்கள். ஒரு சிலர் இதை குழந்தை ரேகை என்பார்கள். எத்தனை ரேகைகள் இருக்கிறதோ அத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement