கோழி கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள பொழுது கனவு வருவது மிகவும் சகஜமான ஒரு விஷயம் ஆகும். அவ்வாறு நமக்கு வரும் கனவினை வைத்து நமது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் அனைவருக்குமே நாம் கண்ட கனவிற்கு என்ன பலன் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.
அதனால் தான் நமது ஆன்மிகம் பதிவின் மூலம் தினமும் ஒரு கனவு பலனை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் உங்கள் கனவில் கோழி வந்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் உங்கள் கனவிலும் கோழி வந்திருந்தது என்றால் அதற்கு என்ன பலன் என்பதை இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா
கோழி கனவு பலன்கள்:
கோழி கனவில் வந்தால் என்ன பலன்:
பொதுவாக கோழி கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக மற்றும் சந்தோஷமாக இருக்கும். உதாரணமாக நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெயர் புகழ் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் அது மட்டுமல்லாமல் சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதை குறிக்கும்.
இறந்த கோழி கனவில் வந்தால்:
அடுத்து இறந்த கோழி கனவில் வந்தது என்றால் கனவு காண்பவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிப்பிடப்படுகிறது. அதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பெரிய கோழி கனவில் வந்தால்:
இப்பொழுது உங்களது கனவில் பெரிய கோழி வருகின்றது என்றால் கனவு காண்பவருக்கு பிறரின் அன்பு மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். அதாவது நீங்கள் ஒருவரின் மீது அதிகமாக அன்பு வைத்திருப்பீர்கள் அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் என்பதை குறிக்கிறது.
காலணிகளை கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா
கோழி முட்டை இடுவது போல் கனவில் வந்தால்:
கனவில் கோழி முட்டை இடுவது போல் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வாழ்வில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்க போகின்றது என்பதை குறிக்கிறது.
நிறைய கோழி கனவில் வந்தால்:
கனவில் அதிக அளவு கோழிகளை கண்டால் கனவு காண்பவர் மற்றவர்களுக்கு வேலை சொல்லும் இடத்திற்கு முன்னேறுவார்கள். மேலும் செல்வங்கள் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.
சேவல் சண்டை கனவில் வந்தால்:
கனவில் இரண்டு சேவல்கள் சண்டை இடுவது போல் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக பிறரிடம் போராடுவார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
கோழி மற்றும் கோழி குஞ்சு கனவில் வந்தால்:
இறுதியாக உங்களது கனவில் கோழி மற்றும் கோழி குஞ்சு வந்தால் கனவு காண்பவருக்கு தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.
எள்ளு கனவில் வந்தால் இதுதானா பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |