கோ தானம் என்றால் என்ன..? | கோ தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்..!

Advertisement

கோ தானம் செய்வதால் என்ன பலன் 

தானம் செய்வதால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். கோமாதாவை அனைவரும் வழிபடுவார்கள். கோமாதாவை வழிபட்டால் நமக்கு செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் கோ தானம் செய்வதால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். கோ தானம் செய்வதால் என்ன புண்ணியம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

பொதுவாக மக்கள் அனைவரும் தானம் என்றால் அன்னதானம் தான் செய்வார்கள் ஏனென்றால் பசியோடு இருக்கும் மனிதர்களுக்கு அவர்கள் பசியை போக்கினால் நமக்கு புன்னியம் கிடைக்கும். மக்கள் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய ஒரே தானம் அன்னதானம் தான் அவர்களிடம் உள்ள பொருள்களை வைத்தே அவர்கள் இல்லத்திலே உணவு செய்து உணவளிப்பார்கள். அன்னதானத்தை செய்வதில் கிடைக்கும் புண்ணியத்தை விட கோ தானத்தில் அதிக படியான புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோ பூஜை மந்திரம் | கோமாதா ஸ்தோத்திரம்

கோ தானம் என்றால் என்ன?

பசு மாடு என்பது தேவலோகத்தில் இருக்கும் அனைத்து தேவர்களின் பிம்பமாக பூலோகத்தில் நாம் காணும் ஜீவன் தான் பசு என்று கருதப்படுகிறது. பசுவிற்கு நாம் எதை கொடுத்தாலும் கோடிக்கணக்கான தேவர்களுக்கு கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் வாசம் செய்கிறார்கள். அப்படி உயர்ந்த பூலோக காமதேனு என்று கொண்டாடப்படக்கூடிய பசுவை கன்றோடு தானம் செய்வது தான் முறையாகும்.

கோ தானம் செய்வதால் என்ன பலன்:

  • உங்கள் வீடுகளில் நிம்மதியே இல்லாத ஒரு சூழல் இருந்தாலும் அல்லது வீடுகளில் ஏதாவது ஒரு சாபம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் நீங்கள் கோ தானம் செய்யலாம். கோ தானம் செய்வதால் உங்கள் சாபங்கள் நீங்கி உங்களுக்கு புண்ணியங்கள் கிடைக்கும்.
  • நீங்கள் கோ தானம் செய்வதால் , தானம் செய்தவரின் முன்னாள் இருக்கும் 7 தலைமுறைகள் மற்றும் அவருக்கு பிறகு வருகின்ற 7 தலைமுறைகளுக்கு கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஏழு ஏழு தலைமுறைகளுக்கு கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்.
  • கோ தானம் செய்வதால் பல்வேறு வகையான தானங்கள் செய்ததற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.
  • தலைமுறை தலைமுறையாக உங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து சில சாபங்கள் இருக்கிறது என்றால் நீங்கள் இந்த கோதானத்தை செய்யும் பொழுது இந்த சாபங்கள் நீங்கும்.
  • குறிப்பாக எம பயத்தை போக்க கூடியது இந்த கோ தானம். கோ தானம் செய்தவர்களுக்கு எம பயமே இருக்காது என்று சொல்லப்படுகிறது.

கோ தானம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்:

  • கோவில்கள் அல்லது கோசாலைகளுக்கு சென்று பசுவிற்கு தேவையான உணவுகளை வாங்கி குடுக்கலாம். இதுவும் கோ தானம் செய்ததற்கான சில பலன்களை நமக்கு அளிக்கும்.
  • பசுவை பராமரிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து தரலாம். மேலும், பசுவிற்கு மருத்துவ செலவுகளை செய்யலாம்.
  • இதுபோல பசுவிற்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து அவற்றை காப்பாற்றுவதற்கு நாம் செய்யும் செயல்கள் கூட கோ தானம் செய்ததற்கான பலன்களை நமக்கு அளிக்கும்.
  • இது எதுவுமே செய்ய முடியாதவர்கள் அம்மாவாசை நாட்களில் அல்லது விஷேச நாட்களில் பசுவிற்கு ஒரு கட்டு கீரை குடுக்கலாம். இதுவும் கோ தானம் செய்ததற்கான பலன்களை நமக்கு அளிக்கும்.
  • பசுவை நாம் பாதுகாத்து, பராமரித்து அவற்றை பொக்கிஷமாக பார்த்துக்கொண்டாள் அதிர்ஷ்டலட்சுமியின்  அருளும் நமக்கு கிட்டும்.

தானம் செய்யும் பொருட்களும் அவற்றின் பலன்களும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement