Chandra Grahan 2024 in Tamil | சந்திர கிரகணம் 2024
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய ஆன்மிகம் பதிவின் வாயிலாக நாம் சந்திர கிரகணம் 2024 பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக சந்திர கிரகணம் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். ஒரு வேலை தெரியவில்லை என்றால், அதை பற்றி கீழ் தெரிந்து கொள்ளலாம்.
இந்த 2024 ஆம் ஆண்டில் நிகழும் சந்திர கிரகணமானது இன்று அதாவது மார்ச் 25.03.2024 அன்று நிகழ உள்ளது. அதனால் பலரும் சந்திர கிரகணத்தை காண ஆவலுடன் இருப்பார்கள். அதனால் சந்திர கிரகணம் எப்போது நிகழவுள்ளது. அதை நாம் எந்த நேரத்தில் காணலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.
சந்திர கிரகணத்தன்று என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்ய கூடாது..? என்று தெரியுமா..
சந்திர கிரகணம் என்றால் என்ன:
பொதுவாக நிலவு மறைவதை தான் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள். அதாவது சந்திர கிரகணம் என்பது, கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இப்படி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது நிலவானது மறைக்கப்படுகிறது. இதை தான் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள்.
சரி இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் எப்போது நிகழவுள்ளது என்று கீழ் காண்போம்.
சந்திர கிரகணத்தின் போது மறந்தும் இதை செய்யாதீர்கள்..
சந்திர கிரகணம் நேரம்:
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது ஹோலி பண்டிகையோடு வருவது மட்டுமல்லாமல் பங்குனி உத்திரத்தில் 100 ஆண்டுகளுக்கு பின் வருவதால் இந்த சந்திர கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதனால் மக்கள் அனைவரும் இந்த சந்திர கிரகணத்தை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அதனால் இந்த சிறப்பு பெற்ற மற்றும் அபூர்வ சந்திர கிரகணமானது காலை 10:23 மணிக்குத் தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது.
அதாவது திங்கள்கிழமை காலை 10:23 மணிக்கு தொடங்கி வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் சந்திர கிரகணம் தெரியும். இருந்தாலும் இந்தியாவில் உள்ள மக்கள் இந்த நிகழ்வைப் பார்க்க முடியாது என்று Space.com அறிவித்துள்ளது.
மேலும் Space.com பகிர்ந்துள்ள விவரங்களின் படி, வரவிருக்கும் சந்திர கிரகணமானது 4 மணி நேரம் 39 நிமிடங்களுக்குத் தொடரும் என்றும், மாலை 3:02 மணிக்கு முடிவடையும் என்றும் கூறியுள்ளது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |