சனி தோஷம் நீங்க பரிகாரம்
ஜோதிடத்தின்படி தோஷங்கள் பல வகைப்படும். ஒவ்வொரு தோஷமும் ஒவ்வொரு விதமான அசுப பலன்களை அளிக்கும். அதாவது, தோஷம் ஏற்பட்டால் பல விதமான கஷ்டங்களை சந்திக்க நேரிடும். அதிலும் சனி தோஷம் பல போராட்டங்களையும் கஷ்டங்களை அளிக்கும். ஆகையால், சனி தோஷம் நீங்க செய்ய வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஜாதகத்தில் அல்லது கிரகப்பெயர்ச்சியின் பொது சனி பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் சனி தோஷம் ஏற்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் சனிபகவானை தொடர்ந்து வணங்கி வர வேண்டும். மேலும், சனி பகவானுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். அப்பரிகாரங்களில் சிலவற்றை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
Sani Thosam Pariharam in Tamil:

உளுந்து பரிகாரம்:
சனிக்கிழமை காலை உளுந்தம்பருப்பை கையில் எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி மேல்நோக்கி காகத்திற்கு போட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் சனி தோஷம் குறையும்.
வாழ்க்கையில் முன்னேற 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்..
தானம் செய்தல்:
கருப்பு எள், கருப்பு ஆடைகள், கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்கள் அல்லது உளுந்து போன்ற பொருட்களை இல்லாதவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் சனி தோஷம் குறையும்.
கருப்பு ஆடை:
சனிக்கிழமைகளில் கருப்பு ஆடைகளை அணிவதன் மூலம் சனி பகவானை சாந்தப்படுத்துவதாகவும், சனி தோஷத்தின் தீய விளைவுகளை குறைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், சனிக்கிழமை அன்று கருப்பு நிற ஆடை அணிந்து சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மந்திரங்கள்:
சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட “சனி காயத்ரி மந்திரம்” அல்லது “சனி மகாமந்திரம்” போன்ற மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













