சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்

Sani Bhagavan Valipadu Murai

சனி பகவான் வழிபடும் முறை | Sani Bhagavan Valipadu Murai

Sani Bhagavan Valipadu Murai: சனி பகவானை போல நல்லது செய்பவர் யாரும் இல்லை, இருப்பினும் பலரும் சனி பகவானை கண்டு அச்சம் கொள்கின்றனர். நவ கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனீஸ்வரர் உள்ளார். சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம் ஆகும். சனி பகவானின் பலன்கள் நீங்கள் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அமையும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் சனி பகவானை எவ்வாறு வழிபட வேண்டும் என்றும் மற்றும் சனீஸ்வரரின் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சனி பகவான் வழிபடும் முறை:

 • Sani Bhagavan Valipadu Murai: சனி பகவான் சற்று வலிமை வாய்ந்தவர் என்பதால் அவரை நேரெதிரே நின்று வணங்க கூடாது. சற்று சாய்வாய் நின்று தான் வணங்க வேண்டும்.
 • சனியை “சாய்வாய் நின்று வழிபடு” என்று ஒரு பழமொழியும் உள்ளது. நல்லது நினைப்பவர்களுக்கு சனீஸ்வரர் எப்போதும் தீமைகள் செய்யமாட்டார், தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் விடமாட்டார்.

பரிகாரம்:

 • Sani Bhagavan Valipadu Murai: சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைய அவருக்கு சிவபெருமான் மீது நிறைய பக்தி உள்ளது.
 • எனவே சிவபெருமானுக்கு திங்கள் கிழமையில் பாலபிஷேகம் மற்றும் வில்வ இலையில் அர்ச்சனை செய்தால் சனீஸ்வரரின் தண்டனையிலிருந்து விடுபடலாம்.
 • தோஷம் நீங்குவதற்கு தேங்காய் ஒன்றை பகவானின் முன்னிலையில் உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
 • பின் எள்ளை ஒரு துணியில் கட்டி அதை நல்லெண்ணெயில் நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதை நீங்கள் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
 • அதிக கஷ்டங்களை நீங்கள் சனி பகவானால் அனுபவிக்கிறீர்கள் என்றால் 108 கருப்பு உளுந்தை தலையணைக்கு அடியில் வைத்து இரவு உறங்கி, அதிகாலையில் குளித்து சனி பகவானை 108 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் ஒரு உளுந்தை தரையில் போட வேண்டும்.
 • சனி பகவானை திருநள்ளாறு சென்று வழிபடுவது நல்லது. இதுவும் சனீஸ்வரரை வணங்குவதற்கு உரிய முறையில் ஒன்றாகும்.
சனி பகவான் பற்றிய ஆன்மீக தகவல்கள்

மந்திரம்:

நீலாம்பரோ, நீலவபு:
கிரீடி க்ருத்ரஸ்தித:
சத்ராஸக ரோ தநுஷ்மான் சதுர்புஜ:
ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வர: ப்ரஸன்ன: இந்த மந்திரத்தை கூறி கொண்டே 9 வாரம் வழிபட்டால் நல்ல பலன்களை பெற முடியும்.

 • மற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் மற்றும் காக்கைக்கு உணவளிப்பதும், நவக்கிரகத்தை 9 முறை வணங்குவதன் மூலமும் சனி தோஷத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்.

சனி பகவான் உகந்த மலர்:

 • சங்கு பூ

சனி கிரகத்திற்கு உரிய மரம்:

 • மூங்கில், பனை மரங்கள், கசப்பான பழ மரங்கள், எண்ணெய்த் தாவரங்கள், சூரியகாந்தி, எள், கடுகு.

சனி திசை எத்தனை வருடம்:

 • சனி தசை 19 ஆண்டுகள் நடைபெறுவதால் அதில் சனி புத்தி 3 வருடம் 3 மாதங்கள் நடைபெறும்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்