சனி பெயர்ச்சி வகைகள்
சனி பெயர்ச்சி வந்தாலே அனைவரும் பெரிய பதட்டத்தில் தான் இருப்பார்கள். அவர்கள் ராசிக்கு ஏழரை சனி வந்துவிடுமோ என்றும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதையும் நினைத்து பயப்படுவார்கள். சனி பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை தரும். சனி பெயர்ச்சியில் வெவ்வேறு வகைகளும் இருக்கிறது. இன்றைய பதிவில் சனி பெயர்ச்சியில் இருக்கும் வகைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
சனி கிரகம் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறும் நிகழ்வே சனிப் பெயர்ச்சி எனப்படும். சனி கிரகம் மெதுவாக நகரும் கிரகம் என்பதால், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும். சனி பெயர்ச்சி ஆரம்பித்தால் குடும்பத்தில் கஷ்டங்கள், உடல்நல குறைவுகள், தொழில் நஷ்டங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படும்.
Sani Peyarchi 2025 Date and Time Tamil
சனி பெயர்ச்சி வகைகள்:
விரைய சனி:
விரைய சனி என்றால் சனி கிரகம் ராசிக்கு முந்தைய ராசியில் நுழைகிறது. ஒருவற்கு விரைய சனி நடக்கும் போது பொருள் ஈட்டினாலும் அது விரயமாகிப் போகும். அதாவது அதிக செலவு, இழப்புகள், மற்றும் திட்டமிடாத செலவுகள் போன்றவை ஏற்படலாம்.
ஜென்ம சனி:
ஜென்ம சனி என்றால் சனி கிரகம் ஒருவரின் சொந்த ராசியில் நுழைகிறது. ஒருவற்கு ஜென்ம சனி நடைபெறும் போது அவர்களுக்கு மிகவும் கடினமான காலகட்டமாகும். ஜென்ம சனி நடைபெறும் ராசியினர்கள் பலவிதமான சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். வேலை இழப்பு, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். ஒருவர் செய்த பாவங்கள் அதிகமாக இருந்தாலோ, மற்றும் உங்கள் குல தெய்வத்தின் பலம் குறைவாக இருந்தால் மிக மிக மோசமான பிரச்சினைகளை, நீங்கள் ஜென்ம சனி காலகட்டத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்.
பாத சனி:
பாத சனி என்றால் சனி கிரகம் ராசிக்கு இரண்டாவது ராசியில் நுழைகிறது. பாத சனி நடைபெறும் ராசியினர்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் படிப்படியாக முன்னேருவார்கள். குறிப்பாக, குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை, மற்றும் உறவுகள் போன்றவற்றால் சில சவால்களை சந்திக்கலாம். இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் காலகட்டம் பாத சனி காலகட்டம் ஆகும்.
ஏழரை சனி வகைகள்:
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழரை சனி சராசரியாக மூன்று முறை அவனது ஆயுற்காலத்தில் நிகழ்கிறது. மங்கு சனி, பொங்கு சனி மற்றும் மரண சனி என்று இதை கூறுவார்கள்.
மங்கு சனி:
மங்கு சனி மனிதனின் முதல் ஏழரை சனி ஆகும். இது இளம் வயதில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் பல சாவல்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். மங்கு சனி போது மனிதன் செய்யும் தவறுகளில் இருந்து அவனுக்கு ஒரு அனுபவம் கிடைக்கிறது.
பொங்கு சனி:
பொங்கு சனி மனிதனின் இரண்டாவது ஏழரை சனி ஆகும். இது மனிதனின் நடுத்தர வயதில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் மனிதன் பல சோதனைகளை கடந்து வருகிறான். அதிலிருந்து அவன் சில பாடங்களையும் கற்றுக்கொள்கிறான்.
மரண சனி:
மரண சனி மனிதனின் மூன்றாவது ஏழரை சனி ஆகும். இது மனிதனின் வயதான காலத்தில் ஏற்படுவதால் இதற்கு மரண சனி என்று பெயரிட்டுள்ளனர். இது மனிதனின் முதுமை வயதி நிகழ்கிறது. இது மனிதனின் உடல்நலம் மற்றும் ஆயுளை பாதிக்கிறது. இந்த காலகட்டத்தில் ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு மன அமைதியை பெறுவது நல்லது.
சனி பகவான், முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை வலம் வருகிறார். முதல் வலத்தை மங்கு சனி, அடுத்ததை பொங்கு சனி, மூன்றாவதைப் மரண சனி என்று அழைக்கிறார்கள்.எனவே, ஒரு மனிதன் தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை சனி பெயர்ச்சியை சந்திக்கிறான்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |