சனி பெயர்ச்சி 2022 எப்போது, யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

Sani Peyarchi Palangal 2022

சனி பெயர்ச்சி 2022 – Sani Peyarchi Palangal 2022

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஏப்ரலில் நீதிக் கடவுளான சனிபகவான் ராசி மாறுகிறார். 29 ஏப்ரல் 2022 அன்று, அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைய இருக்கிறார். இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கு எதுமாதிர்யான பலன்களை வழங்குவார். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தர போகிறார் சனி பகவான்.. பன்னிரண்டு ராசிக்காரர்களில் எருக்கு ராஜயோகம் அடிக்கப்போகிறது என்பதை பற்றி இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

சனி பெயர்ச்சி 2022 எப்போது?

சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும். சனி பகவான் இந்த ராசிக்குள் 30 வருடங்களுக்குப் பிறகு பிரவேசிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2022 ஆம் ஆண்டில், சனி பகவானின் நிலையில் இரண்டாவது மாற்றம் ஏற்படும். அது ஜூலை 12ஆம் தேதி 2022 அன்று நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

சனி பெயர்ச்சி பலன்கள் 2022 – Sani Peyarchi 2022 Palangal in Tamil

சனி பெயர்ச்சி 2022 மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பகவானின் சஞ்சாரம் நன்மைகளை  தரும் ஸ்தானத்தில் அதாவது 11ம் வீட்டில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சனிபகவான் லாபம் தருவார்.

அதேசமயம் புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

சனி பெயர்ச்சி 2022 ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் 10 ஆவது ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. ஜாதகத்தின் பத்தாவது வீடு கர்ம வினைகள், தொழில் மற்றும் வேலை தொடர்பானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும்.

நீங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த புதிய வேலைக்கான உங்கள் தேடல் முடிவடையும். பணம் சம்பாதிக்க உங்களுக்கு வலுவான வாய்ப்புகள் கிடைக்கும்.

நீங்கள் மகிழ்ச்சி, செழுமை மற்றும் சிறப்பான வாழ்க்கையை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சனியின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும்.

சனி பெயர்ச்சி 2022 மிதுனம்:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அஷ்டம சனியால் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய நிம்மதியை தரும்.

வெளிநாட்டு உதவி, ஆன்மீகம், தந்தை, உயர் படிப்பு, ஆகியவற்றைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டிற்கு சனிப் பெயர்ச்சியாகிறார்.

எனவே இதுநாள் வரை தாங்க முடியாத அளவுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் மன ரீதியான, துன்பம், மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொண்டு வந்த நீங்கள் அதிலிருந்து விடுபடும் காலம்.

பண வரவு அதிகரிக்கும், மறைமுக எதிரிகள் விலகுவார்கள், நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும், கவலைகள் மற்றும் குழப்பங்கள் தீரும்.

சனி பெயர்ச்சி 2022 கடகம்:

உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மகர ராசியில் கண்ட சனியாக இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி தற்பொழுது அஷ்டம சனியாக கும்ப ராசிக்கு செல்கிறார். அஷ்டம சனி என்றாலே பொதுவாக பலரும் பயப்படுவார்கள்.

ஆனால் சனி ஆட்சி பெற்று செல்வதால் இந்த காலகட்டத்தில் பெரிதாய் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், ஏழாம் அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி இரண்டுமே சனி என்பதால், உங்கள் உறவு, பார்ட்னர்ஷிப் மற்றும் நண்பர்களிடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆகவே அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக நீங்கள் உறவுகளில் நெருக்கடிகளை இந்த காலகட்டத்தில் எதிர்கொள்வீர்கள். விட்டுக்கொடுப்பது, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது, மற்றும் அனுசரித்து செல்வதும் அவசியம்.

அதே போல, நேர்மையாக இருக்க வேண்டும், குறுக்கு வழிகளில் ஈடுபடாமல் தவிர்க்கவும் வேண்டும்.

சனி பெயர்ச்சி 2022 சிம்மம்:

சிம்ம ராசிக்கு சனி பெயர்ச்சி நிதி நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய தொகை ஒன்று வந்து சேரும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் திடமான ஊதிய உயர்வு உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் தொழில் மற்றும் பணத்தின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி, திருமணம், கணவன் / மனைவி, கூட்டுத்தொழில் ஆகியவற்றைக் குறிக்கிறது.

உங்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தாமதங்கள் மற்றும் தடைகளுக்கு காரகமான சனியால், உறவுகளில் சில சவால்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்.

அதே நேரத்தில், சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால், உங்கள் உறவுகளை மேம்படுத்த இதுவே சரியான நேரம். புதிய தொழில் வாய்ப்புகளையும் சனி தருவார்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டு தொழில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த கட்டத்தில் உங்கள் மறைமுக எதிரிகளும் தோன்றுவார்கள்.

எதிர் பாலினத்தவரிடமிருந்து கொஞ்சம் விலகி இருக்க வேண்டும். ​​உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை சந்திப்பீர்கள். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

சனி பெயர்ச்சி 2022 கன்னி:

சனியின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ஏற்படுத்துவதால் உங்களுக்கு வேலை கிடைக்கும், மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள், கடன் மற்றும் நோய் தீரும்.

அதே நேரத்தில், கடினமாக உழைக்க வேண்டும், நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கத் தாமதமாகும்.

பணியிடத்தில் தடைகள் இருப்பதால் அதைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். சக ஊழியர்களுடன் எந்த விதமான தகராறிலும் ஈடுபட வேண்டாம். நிர்வாகம், காமர்ஸ், மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் சாதகமான காலம்.

வேலையில் மாற்றம் வேண்டும் என்று விரும்புவவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்பாராத பண வரவு மற்றும் லாபம் கிடைக்கும்.

சின்ன சின்ன தடைகள் ஏற்படலாம். ஆனால், இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் உங்கள் எதிர்காலத்துக்கு அடித்தளமாக அமையும்.

சனி பெயர்ச்சி 2022 துலாம்:

துலாம் ராசிக்காரர்களே, அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறக்கப்போகிறது.

ஐந்தாம் வீட்டிற்கு வரப்போகும் சனியால் பூர்வஜென்ம புண்ணியங்களை கொண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள்.

சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும்.

உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமைவதோடு, இலக்கை சிறப்பாக அடைய வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புதிய நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சனி பெயர்ச்சி 2022 விருச்சிகம்:

நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.

சனி பெயர்ச்சி 2022 தனுசு:

ஏழரை ஆண்டுகாலமாக சனி உங்களை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். கடந்த சில ஆண்டு காலமாக சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.

உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.

சனி பெயர்ச்சி 2022 மகரம்:

ஜென்ம சனி விலகப்போகிறது. அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும்.

சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். பயணங்களில் வேகத்தை விட நிதானம் அவசியம்.

சனி பெயர்ச்சி 2022 கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.

சனி பெயர்ச்சி 2022 மீனம்:

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2022 ஆம் ஆண்டு முதல் மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது.

இந்த கால கட்டத்தில் உங்களிடம் உள்ள பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி.

காரணம் சனி பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்