ஜூன் 5 சனி வக்ர பெயர்ச்சி 2022 யாருக்கு யோகம் முழு ராசிபலன் இதோ | Sani Vakra Peyarchi 2022

Advertisement

சனி வக்ர பெயர்ச்சி 2022 எப்போது? | Sani Vakra Peyarchi 2022 Palangal in Tamil

கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் தேதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். ஜூலை 12ம் தேதி மகரத்திற்குத் திரும்பும் அவர், அதுவரை இந்த சனி வக்ர பெயர்ச்சின் போது சனி பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தையும், யாருக்குகஷ்டத்தையும் வழங்க உள்ள என்பதை இந்த பதிவின் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சனி வக்ர பெயர்ச்சி 2022 பலன்கள் 

Sani Vakra Peyarchi 2022 – மேஷம் ராசி:

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிக மிக சாதகமானதாக இருக்கும். குறிப்பாக இந்த காலா கட்டத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை உங்கள் விருப்பங்கள் ஏதாவது நிறைவேறாமல் இருந்தால், இந்த கால கட்டத்தில் அது நிச்சயம் நிறைவேறும்.

Sani Vakra Peyarchi 2022 – ரிஷபம் ராசி:

 

சனி பகவான் உங்கள் ராசியில் 10-ஆம் வீட்டில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். வக்ரம் அடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை முற்றிலும் தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் சோம்பேறி தனத்தை ஒலிப்பது மிகவும் நல்லது. உடன் பிறந்தவர்களினால் சில மனம் வருத்தங்கள் ஏற்படலாம். ஆகவே நீங்கள் விட்டு கொடுத்து செல்வது மிகவும் நல்லது. இந்த கால கட்டத்தில் நீண்ட நாளாக இருந்து வந்த தடைகள் நிவர்த்தி ஆக போகிறது. இருப்பினும் உயர் கல்வி படிப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்பட உள்ளது. ஆகவே இந்த கால கட்டத்தில் ரிஷபம் ராசி காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Sani Vakra Peyarchi 2022 – மிதுனம் ராசி:

 

இந்த கால கட்டத்தில் சனி பகவானால் எந்த ஒரு பாதிப்புகளும் உங்களுக்கு இருக்காது. புதிய வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு போன்றவை கிடைக்க உள்ளது. சுப காரியங்களினால் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்க கூடும். இந்த வக்ர பெயர்ச்சி கால கட்டத்தில் திருமணம் ஆகாத மிதுனம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சகிக்க படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடும். மேலும் உங்கள் நண்பர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்க கூடும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குறிப்பாக இந்த கால கட்டத்தில் VIP-களின் நட்பு தங்களுக்கு கிடைக்கும். இந்த வக்ர பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Sani Vakra Peyarchi 2022 – கடகம் ராசி:

சனியின் இந்த வக்ர பெயர்ச்சி கடக ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நிகழ்கிறது. ஏற்கனவே அஷ்டம சனி நடக்கும் நிலையில், இந்த வக்ர நிலையால் சில நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். அதாவது வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மேலும் இந்த கால கட்டத்தில் பணம் புழக்கம் உங்களிடம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இருப்பினும் புதிய செயல்களை செய்யும்பொழுது ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படுத்துவதும் மிகவும் நல்லது. அதேபோல் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்கள் காதல் விவகாரங்கள் கைகூடும். இந்த காலத்தில் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Sani Vakra Peyarchi 2022 – சிம்மம் ராசி:

கண்டக சனியால் கழுத்தை நெருக்கி கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களே. இந்த சனி வக்ர பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு நிம்மதியாக இருக்கும் கால கட்டமாகவே அமையும். உங்கள் உடம்பிலும், மனதிலும் உற்சாகம் அதிகரித்து காணப்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்த கால காதில் உங்கள் காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நிகழவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த கால கட்டத்தில் வேலையில் சில மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் அந்த மாற்றத்தை யோசித்து செயல்படுத்துவது மிகவும் நல்லது. எதையும் மனதில் நினைத்து கொண்டு கவலை படவேண்டாம். ஆடை, ஆபரணங்கள் இந்த கால கட்டத்தில் அதிகளவு சேரும். உல்லாச பயணங்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Sani Vakra Peyarchi 2022 – கன்னி ராசி:

ருண ரோக சத்ரு சனியால் உங்களுக்கு இருந்து வந்த எதிரிகள் பிரச்சனைகள் ஒழிந்தது. சனி பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. சனி வக்ரம் ஆகும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. இந்த கால கட்டத்தில் வேலையில் சக ஊழியர்கள் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

Sani Vakra Peyarchi 2022 – துலாம் ராசி:

பூவ புண்ணிய சனியால் சில சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு இந்த மாதங்கள் நிம்மதி கிடைக்க போகிறது. உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். உல்லாச பயணங்களினால் நீங்கள் மிகவும் உற்சாகம் அடைய போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களினாலும் அதிக நன்மைகள் நடக்க போகிறது. இந்த வக்ர பெயர்ச்சி கால கட்டத்தில் உங்கள் உறவினர்களினால் ஏற்பட்ட பிச்சனைகள் சரி ஆகும்.

Sani Vakra Peyarchi 2022 – விருச்சிகம் ராசி:

அர்த்தாஷ்டம சனியால் ஆட்டி படைத்த விருச்சிகம் ராசிக்காரர்கள். இந்த வக்ரி பெயர்ச்சியின் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்க போகிறீர்கள். கொடுத்த பணம் வராது என்று இருந்த நிலையில் உங்களுக்கு இப்பொழுது அந்த பணம் கிடைக்க கூடும். கணவன் மனைவி உறவு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணம் புழக்கமும் தாராளமாக இருக்கும். வெகு நாட்களாக தடைபட்டு வந்திருந்த சுப காரியங்கள் இப்பொழுது சிறப்பாக நடந்து முடியும். சிலருக்கு வெளிநாடு போகும் யோகமும் இருக்கிறது. இந்த வக்ர பெயர்ச்சி கால கட்டத்தில் உங்கள் காதல் விவகாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Sani Vakra Peyarchi 2022 – தனுசு ராசி:

கடன் கொடுத்து பணத்தை விரும்ப தராமல் இழுத்தடித்தவர்களிடம் இருந்து பணம் வந்து சேரும். எதிர்பாரதம் பணம் வரவு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். இருப்பினும் உங்கள் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் இந்த கால கட்டத்தில் உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி, வாகனம் போன்றவற்றைல்ல செல்லும் போது  மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் விவகாரம் பொறுத்தவரை கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் இந்த கால கட்டத்தில்.

Sani Vakra Peyarchi 2022 – மகரம் ராசி:

ஏழரை சனியில் பாத சனி நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் உடல் நலத்தில் அதிகம் பாதிப்பு இருந்திருக்கும். இருப்பினும் இந்த வக்ர பெயர்ச்சி கால கட்டத்தில் உங்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்க கூடும். இருப்பினும் தொழில் வியாபாரத்தில் தேவையற்ற முதலீடு போடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள். சில நேரங்களில் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் வேலை இழுப்பு அதிகரித்து காணப்படும். மேலும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டு நீங்கும். உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

Sani Vakra Peyarchi 2022 – கும்பம் ராசி:

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் நீங்கும். புதிய சொத்துக்கள், வண்டி, வாக்கங்கள் வாங்கும் கால கட்டமாக இப்பொழுது உங்களுக்கு அமைய போகிறது. மேலும் பெண்களுக்கு ஆடை ஆபரங்கள் அதிகளவு சேரும். மேலும் அடிக்கடி வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மாணவர்களை பொறுத்தவரை நல்ல பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் அமைய போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சகிக்கப்படும்.

Sani Vakra Peyarchi 2022 – மீனம் ராசி:

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி மனம் மகிழ்ச்சி நிறைந்த பெயர்ச்சியாகவே இருக்கும். குறிப்பாக பணம் வரவு அதிகரித்து காணப்படும். அதேபோல் செலவுகளும் காணப்படும். வீண் செலவுகளை குறைந்து கொண்டு சுப செலவுகளாக மாற்றி கொள்வது மிகவும் சிறந்தது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் காலமாக அமையும். அதேபோல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்க கூடும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement