சித்திரா பௌர்ணமியின் சிறப்பு
சித்ரா பெளர்ணமி எனும் மிக சிறப்பு வாய்ந்த தினத்தில் எப்படி அம்பாளை என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது. அந்த வகையில் இந்த மாதம் அதாவது 16-04-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்ரா பவுர்ணமி வரவிருக்கின்றது.
அதாவது தமிழ் மாதத்தில் சித்திரை 3ஆம் தேதி. நிறைந்த சித்திரா பௌர்ணமி தினத்தில் நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்கவும், குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆயுள் பலத்தை அதிகரிக்கவும், நோய்நொடிகள் இன்றி இருக்க அம்பாளை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் வாங்க.
சித்ரா பௌர்ணமி சிறப்பு | Chitra Pournami Special
வழிபடும் முறை:
சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அம்பாளின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது.
நைவேத்தியம்:
அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.
சித்ரா பௌர்ணமி அம்பாள் வழிபாடு பலன்:
சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.
சித்திரை மாத சிறப்புகள் |
சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? |
சித்ரா பௌர்ணமி சிறப்பு – Chitra Pournami Special:
இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.
சித்ரா பௌர்ணமி நாளில் குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.
நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சித்ரா பௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.
மேலும் இது போன்று பல இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |