Chitra Pournami Mantra in Tamil
பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் சித்ரா பௌர்ணமி அன்று என்ன மந்திரம் சொல்லவேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே கடவுள் மீது அதிக நம்பிக்கை இருக்கும். அப்படி நம் மனதிற்கு பிடித்த கடவுள்களின் மீது நாம் கொஞ்சம் கூடுதலாக பக்தி கொள்வோம். அதுபோல நாம் கடவுளை வணங்கும் போது அந்த கடவுளுக்கு உகந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவோம். ஏப்ரல் 23, 2024, செவ்வாய்க்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி வருகின்றது. எனவே சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்று இப்பதிவின் வாயிலாக காணலாம் வாங்க.
சித்ரா பௌர்ணமி தேதி நேரம் மற்றும் பூஜை முறை
சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்:
பொதுவாக சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அதாவது, சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாள் சித்ரா பௌர்ணமி ஆகும்.
அதுபோல சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தரை எல்லோரும் வழிபடுவது வழக்கம். எமலோகத்தில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் கணக்கை எழுதி வைப்பவர் தான் சித்திரகுப்தர். இப்படி சித்திரகுப்தர் நம் மேல் எழுதும் கணக்கின் அடிப்படையில் தான் நமக்கு சொர்க்கம், நரகம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் சித்ரா பௌர்ணமியில் தான் சித்திரகுப்தர் உதித்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது சித்ரகுப்தர் பிறந்தநாள் தான் சித்ரா பௌர்ணமி.
சித்திரகுப்தர் உருவான விதம்:
ஒரு நாள் பார்வதிதேவி ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்து தாருங்கள் என்று வேண்டினார். சிவபெருமானும் தன் மூச்சுக் காற்றால் அந்த ஓவியத்தை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.
ஆகவே சித்திரம் மூலம் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததால் அவர் “சித்ரகுப்தர்” என்று அழைக்கப்பட்டார். பின் அவர் எமதர்மராஜரிடம், பாவ புண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுகிறார்.
மேலும் நாம் செய்யும் பாவம் புண்ணியக்கணக்கை எழுதுபவரும் இவரே. ஆகையால், சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை வணங்கி இந்த மந்திரத்தை கூறினால், நாம் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அதனால் சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே காண்போம்.
சித்ர குப்த மந்திரம்:
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்!!
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்!!
மேலும் இந்த மந்திரத்தை சித்ரா பௌர்ணமி அன்று சொல்லி வழிபடுவதால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |