Chitra Pournami Slokam in Tamil
பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக சித்ரா பௌர்ணமி யாருக்காக கொண்டாடப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதாவது எம லோகத்தில் நமக்கான பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடப்படும் நாள் தான் சித்ரா பௌர்ணமி.
அதுபோல ஏப்ரல் 23, 2024, செவ்வாய்க்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி வருகின்றது. மேலும் நாமும் கடவுளை வணங்கும் போது அந்த கடவுளுக்கு உகந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவோம். எனவே சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்று இப்பதிவின் வாயிலாக காணலாம் வாங்க.
சித்ரா பௌர்ணமி அன்று இந்த மந்திரத்தை சொன்னால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..
சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்:
பொதுவக ஜோதிட சாஸ்திரப்படி சூரிய பகவான் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் தான் சித்திரை மாதம் ஆகும். இந்த சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து உயிர்கள் அனைத்தின் மீது அருள் மழையைப் பொழியும் ஒரு அற்புத தினம் தான் சித்ரா பௌர்ணமி.
ஆகவே இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் நாம் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டால் நாம செய்த பாவங்கள் நீங்கி, நமக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை தற்போது காணலாம்.
சித்ரா பௌர்ணமி தேதி நேரம் மற்றும் பூஜை முறை
ஓம் கமலவர்ணனே போற்றி
ஓம் சித்திரை உருவே போற்றி
ஓம் பயம் போக்குபவனே போற்றி
ஓம் கால உருவே போற்றி
ஓம் அந்தக நண்பனே போற்றி
ஓம் ஞான உருவே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கணக்கனே போற்றி
ஓம் தர்மராஜனே போற்றி
ஓம் தேவலோக வாசனே போற்றி
ஓம் ஆயுள் காரணனே போற்றி
ஓம் மேன்மை தருபவனே போற்றி
ஓம் குழந்தை வடிவினனே போற்றி
ஓம் குளிகன் உருவினனே போற்றி
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி
மேலும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலத்தில் மேல் கூறியுள்ள இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை சொல்லி வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், அன்பான வாழ்க்கை துணை, சிறப்பான குழந்தைகள், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத வாழ்க்கை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பல நற்பலன்கள் கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |