Sivanukku Ugantha Naal in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய காலகட்டத்திலும் அதாவது இன்றைக்கு இருக்கும் நவீன உலகிலும், ஆன்மீகத்தில் அதீத பற்று கொண்டவர்கள் அதிகமாக தான் இருக்கிறார்கள். அதுபோல நாம் அனைவருமே கோவில்களுக்கு செல்வது வழக்கம். பொதுவாக இந்து சமயத்தில் இருக்கும் கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். அதுபோல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கோவில்கள் இருக்கின்றன.
மேலும் நம்மில் சிலர் தினமும் கோவிலுக்கு செல்வார்கள். சிலர் என்றாவது கோவிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் விசேஷமான நாட்களில் கோவிலுக்கு செல்வார்கள். அதுபோல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நாட்கள் உகந்த நாளாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சிவ பெருமானுக்கு உகந்த நாள் எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. மேலும் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு உகந்த நாள் எது என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
முருக பெருமானுக்கு உகந்த நாள் எதுன்னு தெரியுமா
சிவனுக்கு உகந்த நாள் எது..?
பொதுவாக இந்து சமய கடவுள்களில் பெரிய கடவுளாக இருப்பவர் தான் சிவபெருமான். இவர் தான் முழுமுதற் கடவுள் ஆவார்.இவருக்கு இருக்கும் பக்தர்கள் ஏராளம். அதுபோல சிவபெருமான் மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்கிறார்.
சைவ நம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் பிரபஞ்சத்தையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. அக்னியின் உருவாக இருக்கும் சிவபெருமான் கருணை உள்ளம் படைத்தவர்.
அதுபோல நம்மில் பலரும் சிவபெருமானின் தீவிர மற்றும் அதீத பற்று கொண்ட பக்தர்களாக இருப்பார்கள். சரி சிவபெருமானுக்கு உகந்த நாள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா..?
நாம் அனைவருமே எல்லா நாட்களிலும் சிவன் கோவிலுக்கு செல்வோம். ஆனால் சிவ பெருமானுக்கு திங்கட்கிழமை தான் உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடலாம்.
மேலும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
திங்கட்கிழமை விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்:
சோமவாரம் என்பது திங்கள் கிழமையை குறிக்கிறது. 16 திங்கள் கிழமைகள் சிவன் பார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
திங்கட்கிழமைகளில், விரதம் இருப்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். மேலும் மனதில் இருக்கும் மனக் கஷ்டங்களும் தீரும்.
சிவன் கோவில் சென்றால் இப்படி வணங்கி தவறு செய்யாதீர்கள்…!
சிவனுக்கு உகந்த நிறம்:
சிவ பெருமானுக்கு வெள்ளை மற்றும் பச்சை நிறம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் பூக்களும், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் தான் இருக்கும்.
சிவனுக்கு உகந்த பூக்கள்:
பொதுவாக சிவ பெருமானுக்கு தாமரை பூக்கள் தான் மிகவும் உகந்ததாக இருக்கிறது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு நீல நிற தாமரை மிகவும் உகந்ததாகும். அதுபோல சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |