சிவன் அபிஷேக பொருட்கள் பட்டியல்..!

Advertisement

Shiva Abhishekam Items List in Tamil

சிவனை அபிஷேக பிரியர் என்று கூறுவர். என்றால் சிவன் ஆலயத்தில் பிரதோஷம், மஹா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷகம் நடைபெறும். முக்கியமாக சிவன் பக்தர்கள் சிவபெருமானை அபிஷேக பொருட்கள் இல்லாமல் பார்க்க செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு சிவன் அபிஷேகம் சக்தி வாய்ந்தது. பொதுவாக, ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு வகையான அபிஷேக பொருட்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதன்படி, நாம் ஒவ்வொரு கடவுளையும் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு நற்பலன்கள் கிட்டும். அதேபோல், சிவனிற்கு அபிஷேக பொருட்கள் என்பது உள்ளது. எனவே, அந்த வகையில் சிவனிற்கு அபிஷேகம் செய்யக்கூடிய பொருட்களின் பட்டியல் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. சிவபெருமானிற்கு பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி அன்று அவருக்கு உகந்த அபிஷேக பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நம்முடைய முன்வினை பாவங்கள் நீங்கும்,வறுமை நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், இதுபோன்ற பல பலன்களை சிவபெருமான் நமக்கு அளிப்பார்.

சிவன் அபிஷேக பொருட்கள் பட்டியல்:

சிவன் அபிஷேக பொருட்கள் பட்டியல்

  • பால்
  • தயிர்
  • தேன்
  • பன்னீர்
  • இளநீர்
  • மஞ்சள்
  • விபூதி
  • சந்தனம்
  • பழரசம்
  • கரும்புச்சாறு
  • எலுமிச்சம்பழச்சாறு
  • பஞ்சாமிர்தம்
  • நெய்
  • அரிசி மாவு
  • நல்லெண்ணெய்
  • புனித நதி தீர்த்தம்

மேலே கூறப்பட்டுள்ள 16 வகையான பொருட்களும் சிவன் அபிஷேகத்திற்கு முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. மேலும், இதனை தவிர வேறு சில பொருட்களும் சிவன் அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள். இருந்தாலும், சிவன் அபிஷேகத்திற்கு இந்த 16 பொருட்களும் மிக முக்கியமான பொருட்களாக கருதப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்

அபிஷேக பொருட்களின் பயன்கள்:

பால்:

பால் அபிஷேகம் ஆரோக்கியமான வாழ்வை அளித்து நீண்ட ஆயுளை தரும்.

தயிர்:

தயிர் அபிஷேகம் குழந்தைவரம் உண்டாகும்.

தேன்:

தேன் அபிஷேகம் இசை திறமை கிடைக்கும்.

இளநீர்:

இளநீர் அபிஷேகம் நல்ல மகிழ்ச்சியான குடும்பத்தை உண்டாக்கும்.

கரும்புச்சாறு:

கரும்புச்சாறு அபிஷேகம், ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும்.

எலுமிச்சம்பழச்சாறு:

எலுமிச்சம்பழச்சாறு எதிரிகளின் பகைமை நீங்கும்.

பஞ்சாமிர்தம்:

பஞ்சாமிர்தம் அபிஷேகம், உடலுக்கு வலிமை அளிக்கும்.

நெய்:

நெய் அபிஷேகம் முக்தியளிக்கும்.

நல்லெண்ணெய்:

நல்லெண்ணெய் அபிஷேகம், நன்மை அளிக்கும்.

விபூதி:

விபூதி அபிஷேகம், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.

புனித நதி தீர்த்தம்:

புனித நதி தீர்த்த அபிஷேகம் தூய்மை அளிக்கும்.

மஞ்சள்:

மஞ்சள் அபிஷேகம், நோய் தீர்க்கும்.

மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement