சிதம்பரம் நடராசர் கோயில் ரகசியம் என்ன?

chidambaram temple

அதென்ன சிதம்பர நடராசர் கோயில் ரகசியம்?

சாதாரணமா நாம ரகசியம் சொல்லுகின்றோம் என்றால் அது என்ன அவ்வளவு பெரிய சிதம்பரம் ரகசியமா என்று சொல்லுவோம். அந்த சிதம்பரம் ரகசியத்தைத் தான் இப்போ நாம தெரிஞ்சிக்க போறோம்.

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..!

 

சரி வாங்க அப்படி என்ன அந்த சிதம்பரம் ரகசியம் என்று இந்த பக்கத்தில் நாம் காண்போம்:

பொதுவாக நம் உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது.

அனைத்து நீருக்கு காரணமாக நிலமும், நிலத்திற்கு காரணமாக நெருப்பும், நெருப்புக்கு காரணமாக காற்றும், காற்றுக்கு காரணமாக ஆகாயமும் விளங்குகிறது. இவற்றில் ஆதி காரணமாக ஆகாயம் விளங்குகிறது.

இந்த ஆகாயத்தின் காரணம் தான் சிதம்பர கோயிலின் (chidambaram temple) ரகசியம் ஆகும்.

சுவிச்சர்லாந்தில் உள்ள ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம். CERN தான் உலகின் மிகப்பெரிய பிசிக்ஸ் லேப் இருக்கின்றது.

அந்த நிறுவனத்தின் நுழைவுவாயில் சிதம்பரம் நடராசரின் சிலையை வைத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அந்த சிலைக்கு சில வழிபாடுகளும் மற்றும் பூஜைகளும் செய்கின்றார்களாம்.

கிருஸ்தவர்கள் பெரும்பாலும் வாழ்கின்ற நாட்டில் எதற்காக இந்துக்கள் வழிபடுகின்ற சிலையை வைச்சிருக்கணும். அதுதான் சிதம்பர ரகசியம்.

பொதுவா கோவில்களில் உருவத்தையும். மெக்கா மிதவையில் கடவுளின் அருவத்தையும் வைத்து வழிப்படுகின்றன.

ஆனால் சிதைப்பரத்தில் உருவமாக நடராசர் உருவத்தையும், உருவ அருவமாக லிங்கத்தையும், அருவமாக ஆகாயத்தையும் வழிப்படுகின்றன. அது தான் சிதம்பர நடராச கோவில் ரகசியம் ஆகும்.

அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதி என்று சொல்லப்படுகிறது.

அதனால் தான் இந்த கோவிலுக்கு மேல் செல்லும் எந்த ஒரு செயற்கை கோள்களும் செயல் இழந்து போவதாக சொல்லப்படுகிறது.

சிதம்பரம் நடராசர் கோவிலின் சிலை, கோவில் அமைந்திருக்கும் இடம் மற்றும் அங்கு நடைபெறும் வழிப்பாடுகளே சிதம்பரம் நடராசர் கோவிலின் (chidambaram temple) இரகசியம் ஆகும்.

உலக காந்த ஈர்ப்பு விசையின் மையத்தில் தான் இந்த சிதம்பரம் நடராசர் கோவில் (chidambaram temple) அமைத்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

 

அதே போல் பஞ்சபூத சிவ ஸ்தலங்கள் ஆன காலஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல் போன்ற கோவில்களும் புவி ஈர்ப்பு விசையின் மைய பகுதியில் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பது போல் சிதம்பர நடராசர் கோவிலில் ஒன்பது நுழைவு வாயில்கள் அமைந்திருக்கிறது. நடராசர் சன்னதி மனிதனின் இதயத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் நடராசர் அமைந்துள்ள கருவறைக்கு மேல் புறத்தில் கிட்டத்தட்ட 21,600 தங்க ஓடுகள் இருக்கின்றது. மேலும் 65,000 தங்க ஆணிகளில் பதிக்கப்பட்டுள்ளது.

21,600 தங்க ஓடுகளானது சராசரியா மனிதனின் ஒரு நாளைக்கு விடுகின்ற மூச்சியின் அளவை குறிக்கின்றது.

அதாவது இரு நிமிடத்திற்கு 15 என்றால் 15*60*24 என்ற விதத்தில் கணக்கிடப்பட்டு 21,600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது.

65,000 ஆணிகள் என்பது மனித உடம்பில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

எதற்காக மனித உடலில் உள்ள அமைப்பில் இந்த chidambaram temple கோவில் கட்டப்பட்டது என்று நாம் ஆதி காலத்தில் இருந்தே பார்த்தோம்.

எல்லாவற்றின் ஆதி காரணமா ஆகாயம், மனித உடலிலும் ஆகாயம் உள்ளது அதைத்தான் அம்பரம் என்று சமஸ்கிரதத்தில் சொல்லுவாங்க.

நம் மூச்சிலும் நடராசர்:

நம் மூச்சியிலும் நடராசர் இருக்கிறார் என்று சொல்லுகின்றனர் அதாவது நம் இதயத்தில் மூச்சாக ஆனந்த தாண்டவம் ஆடுகின்றார் என்று சொல்லுவாங்க.

பொதுவா நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொது ஆனந்த தண்டாவாகம நம்முள் நடராசர் இருக்கிறார் என்றும். அதுவே கோபத்தில் இருக்கும் போது ருத்திர தண்டாவாக நம்முள் நடராசர் இருக்கிறார் என்று சொல்லுவாங்க.

கிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..!

 

ஆகவே அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது நடராஜர் சிலை.

மேலும் பிரபஞ்சத்தின் வடிவாக நடராசர் சிலையையும். அவருடைய வலது கையில் இருந்து இடது கால் வரை இருக்கின்ற அமைப்பை பால் வழி மண்டலத்தை ஒட்டி இருக்கிறது.

நடராசரின் இதயம் அமைந்திருக்கும் இடத்தில் சிறிய குடும்பம் ஆன solar system அமைந்திருக்கிறது.

அவர் இடுப்பை சுற்றி ஓடி கொண்டே இருக்கும் பாம்பானது. நீக்காமல் ஓடி கொண்டிருக்கும் காலத்தை குறிக்கிறது.

எல்லாத்துக்கும் மேல் அவரை சுற்றி இருக்கும் வட்டமானது நம் பிரபஞ்சத்தை குறிக்கிறது.

எல்லாம் அடங்கிய ஆகாயத்தை இந்த கோவிலில் நடராஜராக வழிப்படுகின்றன. நடராஜருக்கு அபிஷேக நடத்துவது போல்.

தங்கத்தில் ஆன விழுவத்தை பெரும் ஆகாயத்திற்கு அணிவித்து அதை மூலவரின் பக்கத்தில் வைத்திருக்கின்றன.

மூலவருக்கு அபிஷேக ஆராதனை நிகழும் போது அவற்றை ஆகாயத்திற்கும் காண்பிக்கின்றனர்.

மேலும் ஆறுகால பூஜையின் போது மட்டுமே இந்த தங்கத்தினால் ஆன ஆகாயத்தை பார்க்க முடியும். ஒட்டு மொத்தத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் என்பது சிவத்தலம் மட்டும் அல்ல பழங்கால விண்வெளி ஆராய்ச்சி கூடமாக உலகத்தின் தோற்றத்தை சொல்லி, உலகத்திற்கும் தனிப்பட்ட மனிதருக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கி, அறிவியலுடைய எல்லை ஆன்மிகம் என்றும். இன்னும் பலகோடி ஆண்டுகளுக்கு பலருடைய புருவத்தை உயர்த்தப்போகிறது.

இதுதாங்க சிதம்பரம் ரகசியம்..

ஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்