புண்ணிய தலமான காசி விஸ்வநாதர் கோயில்..!

காசி விஸ்வநாதர் திருக்கோயில் (Kashi Vishwanath Temple)..!

உலகின் மிகப் பழைமையான நகரம் என்று வாரணாசியைச் சொல்லலாம். 23,000 கோவில்களைக் கொண்ட பெருமை பெற்றது இந்த நகரம். கங்கையின் மேற்குக் கரையிலுள்ள இந்நகரில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் (kashi vishwanath temple) அமைந்திருப்பது நாம் அறிந்ததே.

ஆகாயத்திலிருந்து மின்னல் போன்ற பளிச்சிடும் ஒளியானது இந்த நகரமெங்கும் விழுந்ததால், இந்த நகரம் காசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே புனித நீராடுவதற்கென்று 81 குளங்கள் அமைந்துள்ளன.

சரி இப்போது காசி விஸ்வநாதர் கோயில் (kashi vishwanath temple) பற்றிய சில விஷயங்களை படித்தறிவோம் வாங்க..!

காசி விஸ்வநாதர் கோயில் (Kashi Vishwanath Temple) சிறப்பு:

காசி விஸ்வநாதர் ஆலயம் (kashi vishwanath temple) இந்தூர் அரசி அகல்யாபாய் என்பவரால் 1776-ஆம் ஆண்டில் விரிவாகக் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். பின்னர் 1835-ல் ரஞ்சித்சிங் என்ற மன்னர் கோபுர உச்சிக்குத் தங்கத் தகடுகள் வேய்ந்தார்.

இவ்வாலயக் கருவறையில் தங்க மேடையில் லிங்கரூபியாக சிவபெருமான் (shiva temple) அருள்புரிகிறார். 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமான் (shiva temple) திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும்.

கோவிலின் இடப்புறத்தில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும், வலப்புறத்தில் சனி பகவானின் சந்நிதியும் இடம் பெற்றுள்ளன.

காசி விஸ்வநாதர் கோவிலை (kashi vishwanath temple) அடுத்து உலகத்திற்கு அன்னமிடும் அன்னபூரணி கோவிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறப்புகள்..!

காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் (kashi vishwanath temple) சற்று தொலைவில் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் விநாயகர் சாட்சி விநாயகராகக்காட்சி கொடுக்கிறார். இந்தக் காசி விஸ்வநாதர் கோவில் (kashi vishwanath temple) சிறிதாக அமைந்துள்ளதால் துந்திராஜ் கணேசர் கோவிலென்று அழைக்கப்படுகிறது.

வாரணாசியில் இடம்பெற்றுள்ள தஸ்வாஷ்வமேத குளத்தில் மக்கள் நீராடிச் செல்லுவது வழக்கமாகும்.

இந்தக் குளத்தில் பிரம்மதேவன் பத்து குதிரைகளைப் பலி கொடுத்து மாபெரும் யாகத்தைச் செய்தார் என்று சிவபுராணம் சொல்லுகிறது.

சிவபெருமான் (shiva temple) காதில் அணியும் குண்டலம் இந்தக் குளத்தையொட்டி இடம்பெற்றுள்ள கிணற்றில் விழுந்ததால், இந்தக் கிணற்றை மணிகர்ணிகா கிணறு என்று அழைக்கின்றனர்.

மகாவிஷ்ணு தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் இந்தக் கிணற்றைத் தோண்டி உருவாக்கினார் என்று கூறுவர். இந்தக் கிணற்றின் வடக்குப்புறச் சுவர்களில் மகாவிஷ்ணுவின் சரணங்கள் பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராசர் கோயிலின் ரகசியம் என்ன?

மகாவிஷ்ணுவிற்கென்று தனியாக பிந்து மாதவர் கோவில் வாரணாசியில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலருகே பஞ்சகங்கா குளம் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் வாரணா நதி கங்கையோடு கலக்கின்றது.

மகாவிஷ்ணு வாரணாசிக்கு வந்தபோது, இந்த இரண்டு நதிகள் கூடுமிடத்தில் முதன் முதலாகத் தன்னுடைய பாதங்களை வைத்தாரென்று புராணங்கள் சொல்லுகின்றன. இத்தகைய பெருமைபெற்ற அந்த இடத்தில் மகாவிஷ்ணுவிற்கென்று ஆதிகேசவர் கோவில் அமைக்கப் பெற்றிருப்பதும் சிறப்பானது.

இந்தக் கோவிலை அடுத்து தெற்குத் திசையில் துர்காதேவி கோவிலைப் பார்க்கலாம். காசியில் மரண மடைந்தால் அந்த உயிர் மோட்சம் பெறும் என்பது இந்துமத நம்பிக்கை.

காசி மயானம் :

காசி விஸ்வநாதர் கோயிலில் ஷிப்ரா நதிக்கரையோரத்தில் இடம் பெற்றுள்ள உஜ்ஜயினி மஹாநகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெற்று வருகிறது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கக் கோவில்களில் ஒன்றான உஜ்ஜயினி கோவிலில் சிவபெருமான் (shiva temple) மகாகாலேஷ்வரராகக் காட்சி தருகிறார்.

மேலும், “சதிதேவியின் கருகிய உடலிலிருந்து முழங்கைப் பகுதி இந்த மாநகரத்தில் விழுந்ததால் அங்கு பார்வதிதேவி அன்னபூர்ணா தோற்றத்தில் காட்சி கொடுக்கிறாள் என்று சிவபுராணம் சொல்லுகிறது.

உஜ்ஜயினி இடம்பெற்றுள்ள ஹரிசித்தி கோவிலில் மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதிக்கு இடையில் பார்வதிதேவி, அன்னபூர்ணா என்ற பெயரில் காட்சி கொடுக்கிறாள். இந்தக் கோவிலில் மிகப்பழைமையான ஆலமரமொன்று உள்ளது. இந்த ஆலமரம் பார்வதி தேவி அமர்ந்து தவம் செய்த வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாம்.

தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்கள்..!

காசி மயானம்

நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் உஜ்ஜயினியில் அவதரித்தாரென்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. மேலும் செவ்வாய் கிரகத்திற்கென்று இங்கு தனிக்கோவிலும் உள்ளது.

இந்தக் கோவிலை அடுத்து நவகிரக கோவிலும் அமைந்துள்ளது. மகாகாலேஷ்வர் கோவில் குளத்திற்கு அருகே சித்தி, புத்தி தேவிகளுடன் கூடிய விநாயகர் கோவிலும் உள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த கபாலிகா, அகோத்ரா என்ற இரண்டு பிரிவினர்களின் குலதெய்வமான காலபைரவர் கோவிலும் உஜ்ஜயினியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக் கோவில் சிறிய பூங்காவில் அமைந்துள்ளது.

இந்தப் பூங்காவையொட்டிய சிறிய குகையில் பாதாள பைரவர் கோவிலும் இடம் பெற்றிருப்பது உஜ்ஜயினிக்கு தனிப்பட்ட பெருமையைக் கொடுக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்கள்..!பகுதி – 2

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.