தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்கள்..!பகுதி – 2

shiva temples

சக்தி வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்கள்..!

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில் (shiva temples) பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில், சில சிவாலயங்கள் (shiva temples) வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் (shiva temples) பற்றி இங்கே காண்போம்.

13. வேதகிரீஸ்வரர் கோவில்:

இந்த கோவில் சென்னையில் இருந்து 67 கி.மீ தொலைவில் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமைவாய்ந்த சிவன் (shiva temples) கோவிலாகும்.

வேதகிரீஸ்வரர்

இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

14. தியாகராஜர் திருக்கோவில்:

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமைவாய்ந்த கோவிலாகும்.

இந்த தியாகராஜர் திருக்கோவில் திருவாரூரில் அமைந்துள்ளது.

1-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவில் மூலஸ்தானத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து. ஒரு பகுதியை “வான்மீகி நாதர்” என்று பெயரில் வழங்கப்பட்டு சிவபெருமானுக்கு மற்றொரு பகுதியை தியாகராஜருக்கு அர்பணித்துள்ளது.

தியாகராஜர் திருக்கோவில்

வான்மீகி நாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வான்மீகி நாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

15. ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோவில்:

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும்.

இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

222

இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.

இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

16. சுவேதாரண்யேசுவரர் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

சுவேதாரண்யேசுவரர் கோயில்

இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர்.

இங்கு சிவபெருமான், “ஸ்வேதாரண்யேஸ்வரர்” என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, “பிரமவித்யாம்பிகை” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.

17. ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்:

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர்.

சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

18. பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்:

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும்

பழமலைநாதர் கோயில்

இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது.

இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

19. சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு (shiva temples) சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டு வந்த சோழர்களால் அடிப்படை வடிவமைப்பு கட்டப்பட்டது.

சோமேஸ்வரர் ஆலயம்

பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

20. திருவல்லீஸ்வரர் கோயில்:

சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவல்லீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திரு வாலீஸ்வரர் கோயில்

இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.

21. ஐராவதீஸ்வரர் கோயில்

கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள்.ஐராவதீஸ்வரர் கோயில்

ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும்.

துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம்.

அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

22. காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான (shiva temples) காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன.

காசி விஸ்வநாதர் கோயில்

இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

23. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

கரூர், சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர் பெற்றது.

கல்யாண பசுபதீஸ்வரர்

மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.

24. கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது.

கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்

அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

25. பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்:

கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

26. காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி

காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.

திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில்,

புராணங்களின் படி இந்த மன்னன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

27. திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை:

மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது.

சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான்.

அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.

28. மாசிலாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்:

சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசிலாமணீஸ்வரர் கோயில்  அமைந்துள்ளது.

மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்

இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்களின் முதல் பகுதி..!

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.