திருவாரூர் தியாகராஜர் கோயிலின் சிறப்பு..!

shiva temple

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் அதிசயம்:

தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பழமையானது மற்றும் பிரமாண்டமானது. மேலும் இந்த கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகின்றது. ஆசியாவிலேயே மிக பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் தேர் தான். இந்த தலத்தில் சிவன் (shiva temple) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கே ராஜா என்று அர்த்தமாம்.

தென்னகத்தில் அமைந்துள்ள 87வது சிவாலயமாக (shiva temple) இந்த திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் விளங்குகிறது.

சரி வாங்க திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலின் சிறப்பை இந்த பகுதியில் நாம் காண்போம்.

தலத்தின் சிறப்பு:

இந்த ஸ்தலத்தில் 9 ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிக பெரிய மண்டபங்களும், 15 தீர்த்த கிணறுகளும், 3 நந்தவனங்களும், 3 பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும், 100 மேற்பட்ட சன்னதிகளும், 86 விநாயகர் சிலையும், 24-க்கு மேற்பட கோயில்களும் அமைந்துள்ளது என்பது இந்த கோயிலின் சிறப்பு.

தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளமலில் பாத தரிசனம் காண்பது இந்த கோயில் சிறப்பு.

கிழக்கு கோபுரத்தின் உள்புறத்தில் உள்ள 1000 கால் தூண்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் திருவிழா நாட்களின் போது பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்தலத்தில் தியாகராஜருக்கு என்று தினமும் அபிஷேகம் செய்வதில்லை. இருப்பினும் இந்திரன் பூஜித்த மரகதத்தால் ஆன சிறிய லிங்கத்திற்கு தான் தினமும் காலை 08.30 மணி, மதியம் 11.00 மணி மற்றும் இரவு 07.00 மணி என்று அபிஷேகங்கள் செய்வார்களாம்.

அபிஷேகத்திற்கு பிறகு இந்த லிங்கத்தை ஒரு வெள்ளி பெட்டியில் மலர்களை நிரப்பி, அவற்றின் நடுவே இந்த லிங்கத்தை வைத்து அவற்றின் மேல் வெள்ளி குவளை சாற்றி அதிகாரிகளின் முன் நிலையில் இந்த பெட்டி சாற்றப்படுமாம். மற்ற நேரங்களில் இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் வைக்கப்படுமாம்.

திருவாரூர் கோயிலுக்கு அழகு சேர்ப்பது என்னவென்றால் சுமார் 120 அடி உயரம் உள்ள ராஜா கோபுரமும், தெற்கு வடக்காக சுமார் 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக சுமார் 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரம் உள்ள மண் சுவரும், 4 புறம் கொண்ட நில பரப்பில் இந்த ஆலையம் அமைந்துள்ளது.

4 புறமும் கோபுரத்தையும், தேர் ஓடும் விதியையும் சேர்த்து 5 பிரகாரங்களை கொண்டது இந்த ஆலையம்.

அன்னை கமலாம்மாள் சந்நிதி:

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர் பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார்.

முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.

திருவாரூர் தேர்:

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது.shiva temple

“திருவாரூர் தேரழகு” என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.

கோயில் அமைப்பு:

33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

கோயில் வரலாறு:

இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும்.

சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.

சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

செல்லும் வழி:

இந்த சிவத்தலத்திற்கு (shiva temple) செல்லும் வழி மயிலாடுதுறை – நாகப்பட்டிணம் மற்றும் தஞ்சாவூர் – நாகப்பட்டிணம் இரயில்பாதையில் திருவாரூர் இரயில் நிலையம் உள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.