ஜாதக கட்டம் விளக்கம் | Jathagam Kattam Vilakkam in Tamil

Jathagam Kattam Vilakkam in Tamil

Jathagam Kattam Vilakkam in Tamil | ஜாதக கட்டம் விளக்கம்

பொதுநலம்.காம் வாசக்காரர்கள் அனைவர்க்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் ஜாதக கட்டம் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது ஒருவருடைய ஜாதகத்தை அவர்கள் ஜாதகத்தில் உள்ள கட்டங்களை வைத்தான் பார்க்க முறியும். அதாவது அவர்கள் எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும். ஆரோக்கியம் எப்படி இருக்கும், கல்வி, வேலைவாய்ப்பு, திருமண வாழ்க்கை என்று ஒருவருடைய ஜாதிக கட்டத்தை வைத்துதான் ஜோதிட ரித்திகா சொல்ல முடியும். ஆகவே ஒருவத்து ஜாதகத்தை ஆராய்வதற்கு முதலில் ஜாதக கட்டத்தை பற்றி இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஜாதக கட்டம் விளக்கம்:

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். ஜோதிடர்கள் இந்த கட்டத்தினை ஒவ்வொரு வீடு என்று சொல்வார்கள். இவற்றில் லக்னம் ஜாதகட்டடத்தில் ல என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த லக்னம் ஜாதகட்டத்தில் அனைவரது ஜாதகத்திலும் முதல் கட்டத்தில் இருக்கும். அவற்றில் இருந்து 2, 3, 4, 5, 6, 7, 8. 9, 10, 11, 12 வரை மற்ற கிரகங்களின் அமைப்புகளை கணக்கிட வேண்டும்.

ஜாதக கட்டம் அட்டவணை:

ஜாதக கட்டம் விளக்கம் – Jathagam Kattam Vilakkam

முதலாம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்:- ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது இந்த லக்ன கட்டத்தில். மற்றவர்கள் அவரை பார்க்கும் விதம் எப்படி இருக்கும்? தனிப்பட்ட பெருமைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை குறிக்கிறது. அவர் வாழ்க்கையில் எந்த இடத்திற்கு செல்வார்? எந்த நாட்டில் இருப்பார்? அவருடைய குணாதிசயம் எப்படிப்பட்டது? என்பதை சொல்லி விடும். இந்த முதல் வீடு.

இரண்டாம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் கட்டம் என்பது குடும்பம், வாக்கு, தனம் ஆகியவற்றை குறிக்கிறது. குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், பேசும் திறன் இவற்றை பற்றி சுலபமாக கூறி விடும். நல்ல கிரகங்கள் இந்த கட்டத்தில் இருந்தால் நல்ல பலன்கள் இருக்கும். தீய கிரகங்கள் இருந்தால் பலன்களும் அது போல் தான் இருக்கும்.

மூன்றாம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்:- மூன்றாம் வீடு என்பது உங்களுக்கு அடுத்து பிறக்கும் சகோதரம், தைரியம், வெற்றி, அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி சொல்லிவிடும். இங்கே அமர்ந்திருக்கும் கிரகத்தினுடைய ஆற்றல் எப்படி பட்டதோ அப்படி பட்டவராக நீங்கள் இருப்பீர்கள். செவ்வாய் மிகவும் தைரிய கிரகம் ஆவார். எனவே ஜாதகரும் வீரமிக்கவராக இருப்பார். சனி பகவான் மந்தன் ஆவார். எனவே சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார்கள். கிரகங்களின் பார்வை பலத்தை வைத்து இந்த வழியில் பலன்கள் அமையும். தீய பார்வை பட்டால் சகோதரருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

நான்காம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- நான்காம் வீடு தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் நாலில் செவ்வாய் இருந்தால் எப்படியும் வீடு யோகம் உண்டு. எனினும் நல்ல கிரகங்கள் அமைந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பலம் இருந்தாலோ நல்ல பலன்கள் கிடைத்து சொத்து சுகத்தோடு இருப்பார்கள். தீய கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு ஆபத்து நேரலாம். தாயன்பு கிடைக்காமல் போகலாம்.

ஐந்தாம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்:- ஐந்தாம் வீடானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும். குழந்தை பாக்கியம் பற்றியும், போன ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. இங்கு எந்த கிரகம் இருந்தாலும் அதன் தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் தோஷங்கள் உண்டாகும்.

ஆறாம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- ஆறாம் வீடு நோய், கடன், தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். ஆறாம் வீட்டில் சரியான கிரகங்கள் இல்லாவிட்டால் உடல் நலனில் பிரச்சனைகள் இருக்கும். கடன் தொல்லைகள் இருக்கும். வேலையில் பிரச்சனைகள் உண்டாகும். தசா புத்திகேற்ப அந்த கால கட்டத்தில் இதில் மாறுதல்களை உண்டாகும்.

ஏழாம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்:- ஏழாம் விடடானது திருமணம், வியாபாரம், மரணம் போன்றவற்றை குறிப்பன. இங்கு தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது அவைகளின் பார்வை பலம் இருந்தாலோ திருமணத்தில் தடை ஏற்படும். வியாபார வளர்ச்சி இருக்காது, மரணம் சாதாரணமாக இருக்காது.

எட்டாம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- எட்டாம் வீடு ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். எட்டில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். எட்டாம் வீட்டில் சனி மற்றும் குரு இருந்தால் தீர்காயுள் கிட்டும்.

ஒன்பதாம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்: ஒன்பதாம் வீடு தந்தையை குறிக்கும். இங்கு தீய கிரகங்கள் இருந்தால் தந்தையுடன் பிரச்சனைகள் இருக்கும்.

பத்தாம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- பத்தாம் வீடு கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. பத்தில் இருக்கும் ராசியாதிபதி லக்னத்திலிருந்து எந்த வீட்டில் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்களும் இருக்கும். உதாரணத்திற்கு ராசியாதிபதி லக்னத்தில் இருந்தால் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். சொந்தக் காலில் நிற்பதை விரும்பக் கூடியவர்கள்.

பதினோராம் வீடு:

ஜாதக கட்டம் விளக்கம்:- பதினோராம் வீட்டில் இருக்கும் கிரகம் அல்லது ராசியாதிபதி சரியாக அமையவில்லை என்றால் சம்பாரிக்கும் பணம் அனைத்தும் வீண் விரையமாகிவிடும். ஏனெனில் இது தான் லாபஸ்தானம் ஆகும்.

பணிரெண்டாம் வீடு:

Jathagam Kattam Vilakkam in Tamil:- பணிரெண்டாம் வீடு மோட்சஸ்தானம் ஆகும். விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். பனிரெண்டில் அமரும் கிரகங்கள் பொறுத்து பலன் இருக்கும். உதாரணத்திற்கு சனி பகவான் வந்து அமர்ந்தால் பாவங்கள் செய்பவராக இருப்பார்கள். நஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.

ராகு கேது எந்த இடத்தில் இருந்தால் தோஷம் தெரியுமா?
ஜாதக கட்டம் பார்ப்பது எப்படி?
சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?
ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்